தில்லியில் இருக்கும் அரசு வீட்டிற்கு மக்களவை தலைவர் மீராகுமார் ரூ. 1.98 கோடி வாடகைபாக்கி வைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவிக்கிறது .
தில்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஷ்சந்திரா அகர்வால், அரசியல் பிரமுகர்கள் அரசு வாடகைபாக்கி குறித்து தகவல் அறியும்
சட்டதின் கீழ் கேட்டகேள்விக்கு, தில்லி ஊரக மேம்பாட்டுதுறை மீராகுமார் போன்ற சில அரசியல்வாதிகளின் வாடகை விவரங்களை தெரிவித்துள்ளது.
மீராகுமார், தனது தந்தை ஜெகஜீவன்ராம் 1986 ஆண்டு இறந்ததைதொடர்ந்து தில்லி கிருஷ்ணமேனன் சாலையில் இருக்கும் எண்:6 வீட்டில் வசித்துள்ளார். அந்தவிதத்தில் அவரது வாடகை பாக்கி ரூ. 1,98,22,723 என தெரிவித்துள்ளது.
2011 ஆண்டு_செப்டம்பர்-16ம் தேதி பதிவேடுபடி, இவரைதொடர்ந்து , ஓவியகலைஞர் பிரதிபாபாண்டே ரூ. 43.63_லட்சம், மத்திய வர்த்தக_அமைச்சக அதிகாரி பிரவீண்குமார் ரூ.2.61 லட்சம், முன்னாள் தகவல்_தொடர்பு ஆணையர் ஏஎன். திவாரி ரூ. 4.71 லட்சம், லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமைசட்ட தகவல் தெரிவிக்கிறது.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.