ராகுலைப்போல சிலமாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை தேவைப்படாமல், அயராது மக்கள்பணியில் ஈடுபட்டு வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.
பிகார் மாநிலத்தில் உள்ள சீதாமரி-சரன் லோக் சபா தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் வித்தியாசம் உண்டு. ராகுலுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட சிலமாத இடைவெளியிலும் விடுமுறை தேவைப்படுகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக அயராது தொடர்ந்து மக்கள்பணியில் ஈடுபட்டு வருகிறார் மோடி.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் ஆட்சியில் இருந்தபோது முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வுகாண உருப்படியான நடவடிக்கைகள் எதையும் எடுத்ததில்லை. குறிப்பாக, பயங்கர வாதத்துக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொள்ள வில்லை. மேலும், பின் தங்கிய வகுப்பினர் மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவில் உள்ள ஏழைகளுக்கு ஆதரவான எந்தஉறுதியான நடவடிக்கையையும் காங்கிரஸ்கட்சி மேற்கொள்ளவில்லை.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவவீரர் லான்ஸ் நாயக் ஹெம்ராஜை பாகிஸ்தான் ராணுவம் தலையை துண்டித்துகொன்றது. இது சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு இதற்கு போதுமான பதிலடி நடவடிக்கைகளை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. ஆனால், பாஜகஆட்சியில் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது, துல்லியத்தாக்குதல் மூலமாக தகுந்த பதிலடி தரப்பட்டது.
அதேபோன்று, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, 56- அங்குல மார்பளவை கொண்ட நமது பிரதமர் வான் வழிமூலம் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பயங்கரவாதமுகாம்களை அழித்துக்காட்டினார். பாஜக ஆட்சியில் தேசத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் சிறைக்குபின்னால் தள்ளப்படுவது உறுதி என்றார் அவர்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.