தீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சியினர்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தினமும் தாக்குதல் நடத்தி வந்தனர். அதனால் எந்தநகரமும் பாதுகாப்பின்றி இருந்தது. 2008ல் மும்பையை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது எப்படி என்பதை நாட்டுமக்கள் நன்கறிவார்கள்.

அத்துடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நின்றுபோனதா? இல்லை. 2008 ஜனவரியில் உ.பி.யிலும், மே மாதம் ஜெய்ப் பூரிலும், ஜூலையில் பெங்களூருவிலும், அடுத்த நாளில் அகமதா பாத்திலும், செப்டம்பரில் இருபயங்கரவாத தாக்குதல், அக்டோபரில் கவுகாத்தி, அகர்தலா, இம்பாலில் தொடர் குண்டு வெடிப்புகள் என அனைத்து நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல் நடடைபெற்றது.

ஐபிஎல் தொடர் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. ஆனால் கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தென் ஆப்ப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டன.

சிலதினங்களுக்கு முன்பு மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான தொடர் நடவடிக்கைகளை பாஜக எடுத்தது. எனவே, தற்போது உலகமே இந்தியாவை பற்றி பேசி வருகிறது.

”நாங்கள் 6 துல்லிய  தாக்குதல்களை நடத்தினோம் என காங்கிரஸ் இப்போது உரிமை கோருகிறது. எதற்காக தாக்குதல்கள் நடைபெற்றன, எந்தத்தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கும் இதுதெரியாது. சொல்லப்போனால் இந்தியர்களுக்கே இது தெரியாது.அவர்கள் வீடியோ கேமில் தான் Surgical strike நடத்தியிருப்பார்கள்
..

நம்முடைய (பாஜக) தாக்குதலை முதலில் அவர்கள் (காங்கிரஸ்) கேலி செய்தனர். பிறகு போராட்டம் செய்தனர். இப்போது ‘மீ டூ’ ‘மீ டூ’ என்கின்றனர்”

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...