மக்களவைத் தேர்தலில் இன்னமும் 2 கட்ட வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், போட்டியில்இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் விலகிவிட்டன, பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மக்களவைத் தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 6-ம் கட்டதேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஹரியாணா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி ஹரியாணாவில் பிரதமர் மோடி இன்று தீவிரபிரச்சாரம் மேற்கொண்டார். ஹரியாணா மாநிலம் பதேபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
2014-ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் மக்களின் ஆசியுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி மக்களின் ஆதரவை எங்கள்அரசு பெற்றுள்ளது.
பாஜக கூட்டணியுடன் காங்கிரஸ் கூட்டணி மோதிபார்த்து விட்டது. எப்படியாவது ஒரு ‘கிச்சிடி’ அரசை அமைத்துவிட வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி விரும்பியது. ஆனால் அதற்கானவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் இப்போதே போட்டியில் இருந்து காங்கிரஸ் கூட்டணி விலகிவிட்டது. தேர்தலில் வெற்றிபெறுவது இயலாது என்பதை காங்கிரஸ் கூட்டணி புரிந்துகொண்டு விட்டதால் இன்னுமும் 2 கட்டத் தேர்தல் நடைபெறும் முன்பாகவே போட்டியில் இருந்து விலகிக்கொண்டு விட்டன.
இதனால் மீண்டும் பாஜக அரசமைப்பது உறுதியாகி விட்டது. மீண்டும் மோடி அரசு அமைவது உறுதி. மக்களுக்காக எங்கள் அரசு தொடர்ந்து பணியாற்றும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
You must be logged in to post a comment.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
1provides