பிரதமர் நரேந்திரமோடி தன்னை அறிவுறுத்தவும் எச்சரிக்கவும் கூடிய ஒரே பாஜக. தலைவர் யார்? என்பதை முதன் முறையாக அடையாளம் காட்டியதுடன் அவருக்கு புகழாரமும் சூட்டியுள்ளார்.மக்களவை சபாநாயகர் சுமித்ராமகாஜன் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவருக்கு 76 வயது ஆவதால் இந்தமுறை தொகுதி ஒதுக்குவது சந்தேகம் என்று பரவலாக பேசப்பட்டது. அதேசமயம் இந்தூர்தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பும் தாதம் ஆனது.
இந்நிலையில், இதுபற்றி கருத்துதெரிவித்த சுமித்ரா மகாஜன், வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார். இதையடுத்து, இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷங்கர் லால்வானியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது பாராளுமன்ற சபாநாயகரும் அந்த தொகுதியின் எம்.பி.யுமான சுமித்ரா மகாஜனை அவர் வெகுவாக புகழ்ந்துப்பேசினார். ஒரு சபாநாயகராக தனது பணியை திறமையாகவும், கட்டுப்பாட்டுடனும் நிறைவேற்றியதால் நாட்டுமக்களின் எண்ணங்களில் நீங்காத இடத்தை சுமித்ரா பிடித்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் பிரதமராக என்னை உங்களுக்கு எல்லாம் மிகநன்றாக தெரியும். ஆனால், என்னை அறிவுறுத்தவும் எச்சரிக்கவும் எங்கள் கட்சியில் உள்ள ஒரேநபர் யாராவது உண்டு என்றால் அது இவராகத்தான் இருக்கும். பாஜகவில் நானும் அவரும் இணைந்து பல காலம் பணியாற்றி இருக்கிறோம். பணியின் மீது அவர் காட்டும் அர்ப்பணிப்புணர்வு அலாதியானது. இந்தூர் நகரின் மேம்பாட்டுக்காக சுமித்ரா மகாஜன் முன்னெடுத்த அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும் என இங்குள்ளமக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என்றும் மோடி தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.