மக்களவை தேர்தலில் பாஜக பெற்றுள்ள அபாரவெற்றியின் மூலம், நாட்டில் சாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிவதாக கட்சியின் செய்திதொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் மீண்டும் தனி பெரும்பான்மை பெற்று 303 தொகுதிகளில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது இந்நிலையில் பாரதிய ஜனதாவின் வெற்றிகுறித்து கருத்து தெரிவித்துள்ள கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஷாநவாஸ் ஹுசைன், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டை பிரதமர் மோடியின் வெற்றி மேலும் பலப்படுத்தும்.
சாதி, இனம், மதம் பாராமல் பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என விரும்பி மக்கள் வாக்களித்துள்ளனர். மொழி பாகுபாட் டையும் பார்க்காமல் தான் மக்கள் மோடிக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர் என குறிப்பிட்டார். நாட்டிலுள்ள அனைத்துதரப்பு மக்களுக்காகவும் தான் மோடி உழைத்தார், உழைத்து வருகிறார் என மக்களுக்கு புரிந்துள்ளது.
பிரதமர் மோடியின் அசாத்திய செயல்பாடுகளுக்கு உரியவெற்றியை மக்கள் அளித்துள்ளனர் என மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் பேசிய ஷாநவாஸ், நாட்டில் மதவாதம் மற்றும் சாதியத்தைவிட தேசியவாதமே மேலோங்கி நிற்பதைதான் இந்ததேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக கூறினார். சாதியத்தை அடிப்படையாக வைத்து எதிர்கட்சிகள் பலஇடங்களில் கூட்டணி அமைத்தன. ஆனால் எதிர்கட்சிகளின் கருத்தை மக்கள் புறந்தள்ளி பாரதிய ஜனதாவிற்கே ஆதரவளித்துள்ளனர். குறிப்பாக இந்தசெய்தியை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மக்கள் நன்றாகவே எதிர்கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளனர். மேற்கண்ட மாநிலங்களில் சாதி அடிப்ப டையிலான கூட்டணியை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |