பாஜக பெற்றவெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி

தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசியவர், வாஜ்பாய்க்குப் பின் தேசியளவில் செல்வாக்குபெற்ற தலைவராக மோடி இருக்கிறார். தேசியளவில் நேரு, இந்திரா போலவும், தமிழகத்தில் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர், ஜெயலலிதா போல மக்களை ஈர்க்க  கூடிய தலைவராக மோடி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்றவெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி.

தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதனால்தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஒரு முறை ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலை வீசிவிட்டால் அதைமாற்றுவது கடினம். மோடியின் எதிர்ப்பலையால் தமிழகத்தில் மற்றவர்கள் வென்றுள்ளனர். நீட், மீத்தேன், கெயில் எரிவாயுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளின் சூறாவளி பிரச்சாரம்தான் தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு காரணம்.

கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கைக் எடுக்கப்படும் என நிதின்கட்கரி கூறியது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்தபிறகும், நிதின் கட்கரி நதிகளை இணைப்பதை குறித்து பேசியது பாராட்டுக்குரியது. இது விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

புதியதாக கட்சி ஆரம்பித்து, மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைபெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும்முடிவை ராகுல் கைவிடவேண்டும். காங்கிரஸில் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களை கையாள்வதில் ராகுலுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல எதிர்க் கட்சியும் மிகவும் முக்கியம். பாஜக-வின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறேன். என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...