பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா பதவியேற்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவின் தேசியதலைவரும் காந்தி நகரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்க இருப்பதால் தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 58 வயதாகும் ஜேகத்பிரகாஷ் எனப்படும் ஜே.பி. நட்டா இமாச்சல பிரதேசத்தின் மூத்த பாஜக தலைவராவார். இமாச்சலத்தில் அமைச்சராக இருந்தவர் கடந்த மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
அமித்ஷா போன்றே செயல்வீரராக உள்ள நபரை தேடும்போது கிடைத்தவர் தான் இந்த ஜே.பி.நட்டா. இதனால் மோடியும் நட்டாவை விடாமல் பிடித்து காம்ப்ரமைஸ் செய்து தலைவராக பதவியேற்க வைக்க உள்ளார். தொழில் அதிபராக இருந்த அமித் ஷா, குஜராத்தில் அப்போது முதல்வராக இருந்த மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலை தொடங்கி தற்போது மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தான் கடந்த 5 வருடங்களாக தேசியதலைவராக இருந்த அமித்ஷா தற்போது உள்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதனையடுத்து தேசியதலைவர் பதவியை ஜே.பி.நட்டா நிர்வகிக்க உள்ளார்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |