பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் மிகப்பெரிய தலைமுறை மாற்றம்

பாஜக மக்களவை குழுத்தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணை தலைவராக ராஜ்நாத்சிங்கும் தேர்வு செய்ய பட்டுள்ளனர். மாநிலங்களவை குழு தலைவராக அமைச்சர் தாவர்சந்த் கெலாட், துணைத் தலைவராக அமைச்சர் பியூஷ்கோயல் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி புதிதாக இடம் பெற்றுள்ளார்.கட்சியின் தலைமைக் கொறடாவாக சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர 3 பெண் எம்.பி.க்கள் துணை கொறடாக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மக்களவைக் கொறடாவாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மாநிலங்களவைக்கு 6 கொறடாக்கள் நியமிக்க பட்டுள்ளனர்.
பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழுவில் மக்களவையில் இருந்து நிதின்கட்கரி, ரவிசங்கர் பிரசாத், அர்ஜுன் முண்டா, நரேந்திர சிங் தோமர், ஜுவல் ஓரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். மாநிலங்களவையில் இருந்து ஜேபி. நட்டா, ஓம் பிரகாஷ் மாத்தூர், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர சிங் பிரதான், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.

மக்களவையில் பாஜகவுக்கு இப்போது 303 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 70 எம்.பி.க்களும் உள்ளனர். மாநிலங்களவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

பாஜகவின் நாடாளுமன்ற அலுவலக பொறுப்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் வர்கியா நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக பால சுப்பிரமணியம் அறிவிக்கப் பட்டுள்ளார்.
பாஜகவின் நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் இந்தமுறை மிகப்பெரிய தலைமுறை மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதுநாள்வரை இக்குழுவில் இடம் பெற்றிருந்த கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குழுவில் இடம் பெறவில்லை. அதேபோல கடந்தமுறை அமைச்சர்களாக இருந்த அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் இடம் பெறவில்லை.

இருவரும் உடல்நிலை காரணமாக முக்கிய பொறுப்புகள் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.பாஜக நாடாளுமன்ற நிர்வாகக்குழுவின் முதல் கூட்டம் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினமே பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடைபெறவுள்ளது. 17-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...