பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடையாது

பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது.

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது. ராகுலும், பிரியங்காவும் மோடியை மிகமிக மோசமாக விமர்சித்து பேசி பிரசாரம் செய்தும்கூட காங்கிரஸ் கட்சிக்கு 2014-ம் ஆண்டு தேர்தலை விட தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து 2-வது தடவையாக பறிபோய் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 சதவீதம் இடங்கள் அதாவது 55 இடங்களை பெற்றால் தான் ஒருகட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியும். காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தைப் பெற தற்போது 3 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர். இது ராகுலை கடும்விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல் ஓரிரு எம்.பி.க்களை வைத்திருக்கும் சிறியகட்சிகளை காங்கிரசுடன் இணைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிடலாம் என்று ஓசையின்றி முயற்சிசெய்தார். ஆனால் எந்த கட்சியும் காங்கிரசுடன் இணைய மறுத்து விட்டன.

இதனால் மக்களவை காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவும் ராகுல் தயங்குகிறார். இந்தநிலையில் நேற்று பாராளுமன்றம் முன்பு பேசிய பிரதமர் மோடி, “பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க் கட்சிகளின் குரலுக்கு மரியாதை உண்டு. எனவே எண்ணிக்கை பற்றி கவலைப் படாமல் எதிர்க் கட்சிகள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்றார்.

பிரதமர் மோடி பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப் படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதற்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்த்தனர்.

ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் இந்தவி‌ஷயத்தில் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் சலுகை காட்டக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளனர். அதன்படி காங்கிரசுக்கு எதிர்க் கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜனதா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...