பாஜக நிறுவனர் சியாமாபிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, வாரணாசியில் கட்சி உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கிவைத்தார்.
பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடுமுழுவதிலும் பாஜக உறுப்பினர் சேர்க்கையையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக முகாம்களும் நடத்தப் படுகின்றன. இதில் அந்தந்தபகுதி பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்துகின்றனர்.
அந்தவகையில், வாரணாசியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தார்.
காலை குஜராத்தின் பாபத்பூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், பாஜக தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், வாரணாசி விமான நிலையத்தில் லால்பகதூர் சாஸ்திரியின் திருவுருவச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில், லால் பகதூர் சாஸ்திரியின் மகன்கள் அனில் சாஸ்திரி மற்றும் சுனில்சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி,”அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம்கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்குவதே அரசின்நோக்கம். புதிய இந்தியாவை உருவாக்குவதை நோக்கி மத்திய அரசின் பயணம் இருக்கும். அதற்கான பாதையை 2019-20 மத்திய பட்ஜெட் காட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
”மத்திய அரசின் இந்த இலக்கை எண்ணி சிலர் விமர்சிக்கின்றனர். இதன்தேவை என்ன என்று சிலர் கேட்கிறார்கள்? என கேட்கிறார்கள். இவர்கள் தொழில்முறை அவ நம்பிக்கையாளர்கள்” என கூறினார்.
மேலும்,”காசி மண்ணில் இருந்துகொண்டு, கட்சியின் அனைத்து தொண்டர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். காசியில் இருந்து, பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் இன்று பெற்றுள்ளேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |