சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பா.ஜ.க சார்பில் ‘எல்லா இடத்திலும் பா.ஜனதா; எல்லோர் இடத்திலும் பா.ஜனதா’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் உறுப்பினர்சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மத்திய சட்டம் மற்றும் தகவல்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். மேலும், உறுப்பினர் சேர்க்கை பிரசார வாகனத்தையும் தொடங்கிவைத்தார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் 8980808080 என்ற எண்ணை அழுத்தி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார்.
நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது, “பா.ஜனதா 11 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே பெரியகட்சியாக விளங்குகிறது. பா.ஜனதாவில் சாதாரண தொண்டர்கள்கூட தலைவர்கள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும் என்பது இல்லை. தமிழகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் உதிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கூட அவர்களுக்குதான் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நடந்துமுடிந்த தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா பின்னடைவை சந்தித்தது. இந்தபின்னடைவை பின்னுக்கு தள்ளி உறுப்பினர் சேர்க்கையின் மூலம் வரும்காலத்தில் தமிழகத்தில் பாஜனதாவை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |