பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் கர்நாடகாவில் ஆளும் அரசு கவிழ்ந்தது. கர்நாடக ஆட்சி கவிழ்ந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வி யடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த வர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார்.இதை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மாற்று ஏற்பாடுகள் செய்து முடிக்கும் வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொண்டார்.
நேற்று (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு மாநில சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 பேர் வாக்களித்தனர். அதேவேளையில் அரசுக்கு எதிராக 105 பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. .
இதனிடையே பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தனியார்விடுதியில் நடைபெற்றது. கட்சியில் மேலிட பார்வையாளர் முரளிதரராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்கால திட்டம்குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று பாஜக மூத்த தலைவர் ஜவடேகர் தலைமையில் அதிகாரபூர்வ ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தில் பாஜக எம், எல் ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் ஆதரவுகுறித்து அப்போது விரிவாக ஆலோசிக்கப் படுகிறது. கூட்டத்திற்கு பின்னர் எடியூரப்பா தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆட்சி அமைக்க உரிமைகோருவார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |