விண்வெளியில் இருந்தபடியே எதிரிநாட்டு ராணுவ நிலைகள் தகவல்தொடர்பு செயற்கைகோள்கள், வழிகாட்டும் செயற்கைகோள்கள் உள்ளிட்டவை அளிக்கும் ஆயுத உற்பத்தியில் சீனா ஈடுபட்டுவருகிறது. பூமியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மூலம் செயற்கைகோள்களை அழிக்கும் வல்லமையும் விண்வெளியில் இருந்தபடியே லேசர் மற்றும் மின்காந்த அலைகளைவீசி எதிரிநாட்டு இலக்குகளை அழிக்கும் நிலையும் சீனாவின் வசம் உள்ளது.
இந்நிலையில் இந்தியா தனது பாதுகாப்பிற்காவும், ராணுவ பயன் பாட்டிற்காகவும் பல செயற்கை கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைகோள்களை பாதுகாப்பதற்காகவும் விண்வெளியில் இருந்து நாட்டின் நிலைகளின் மீது தாக்குதல் நடைபெற்றால் அதனை முறியடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புத் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி மிஷன்சக்தி என்ற பெயரில் பாதுகாப்புத் துறை சார்பில் விண்வெளி தாக்குதல் ஒத்திகை இந்தியா நடத்தியது. இதில் பூமியில் இருந்து 283 கி.மீ. உயரத்தில் பறந்த 740 கிலோ எடைகொண்ட இந்தியாவின் மைக்ரோசாட்- ஆர் என்ற செயற்கைகோள் ஏவுகணையால் தாக்கி அழிக்கப்பட்டது.
இதேபோன்று விண்வெளி யுத்தபயிற்சி மேற்கொள்ள முப்படைகளுக்கும் பிரதமர் மோடி உதகரவிட்டுள்ளார். இண்ட்விண்வெளி பயிற்சி என்ற பெயரில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த யுத்தபயிற்சியில் முப்படையினர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அனைத்து பாதுகாப்பு துறை அமைப்புகள் நாட்டின் மிகமுக்கிய ஐ.ஐ.டி. அமைப்பின் ஆய்வாளர்கள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தபயிற்சியின் போது விண்வெளி யுத்தத்தில் இந்திய படையினரின் திறன் சோதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் அச்சோதனையில் யுத்த குறைபாடுகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். திறன்மேம்படுத்தவும், குறைபாடுகளை களையவும் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
விண்வெளியில் உள்ள நாட்டின் அரியசொத்துக்களை காக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிது. எதிரிகளால் விண்வெளியில் இருந்து ஏற்படும் ஆபத்தில் இருந்து நாட்டைகாக்கவும், என்னென்ன செய்யவேண்டும் என்று 2 நாட்கள் யுத்தபயிற்சியின் போது முப்படையினரும் பயிற்சி எடுக்க உள்ளனர்.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |