காஷ்மீரில் பா.,ஜனதா மற்றும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருந்தன.
மெகபூபா முதல்மந்திரியாக இருந்து நடத்திய அந்த ஆட்சி 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை நடந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மெகபூபாவுக்கு கொடுத்துவந்த ஆதரவை பாஜக. வாபஸ்பெற்றது . இதைத்தொடர்ந்து ஆட்சிகவிழ்ந்ததால் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி ஆட்சி கடந்த ஓராண்டாக நீடித்துவரும் நிலையில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி மிக தீவிரமாக நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டில் முக்கிய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லபட்டனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மராட்டியம், ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களில் சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. அப்போது காஷ்மீர் மாநிலத்துக்கும் சேர்த்து தேர்தல்நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் சட்டசபை தேர்தலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே காஷ்மீரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தற்போது 25 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த ஓராண்டில் அம்மாநிலத்தில் பாஜக. செல்வாக்கு மிக கணிசமாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா பதிலடிதாக்குதல் நடத்தியதை காஷ்மீர் மக்கள் வரவேற்றுள்ளனர்.
எனவே இந்த தடவை அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கவேண்டும் என்பதில் பாஜக. மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்காக பாஜக புதிய வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் பாஜக. மூத்த தலைவர்களும் காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது பா.ஜ.க. ஆட்சியை உருவாக்க காஷ்மீரில் என்னென்னசெய்வது என்பது பற்றி முடிவுசெய்யப்படும்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |