சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆசம் கான்.தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜனதா வேட்பாளரும் நடிகையுமான ஜெயபிரதாவை ஆபாசமாகவிமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதற்காக ஆசம்கான் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து இருந்தது.
இதற்கிடையே, சமீபத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.யை கண்ணியமற்ற முறையில் பேசி ஆசம்கான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
பாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடைமசோதா குறித்து விவாதம் நடந்தபோது சபாநாயகர் ஓம்பிர்லா அவையில் இல்லை. இதனால் மக்களவை தலைவர் இருக்கையில் பா.ஜனதா பெண் எம்.பி.யும், துணை சபாநாயகருமான ரமா தேவி அமர்ந்து இருந்தார்.
அப்போது ஆசம்கான் பேசும் போது, ‘‘நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். எல்லா நேரத்திலும் உங்கள் கண்களை பார்ப்பது போல் உணர்கிறேன்’’ என்ற வகையில் சர்ச்சைக் குரிய வகையில் பேசினார்.
அவரது இந்த கண்ணியமற்ற பேச்சுக்கு கடும்கண்டனம் தெரிவிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கட்சி பேதமின்றி பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.
இந்தவிவகாரங்கள் குறித்து பல்வேறு கட்சி எம்.பி.க்களுடன் சபாநாயகர் ஓம்பிர்லா ஆலோசனை நடத்தினார். இந்தசர்ச்சை தொடர்பாக ஆசம்கான் திங்கட்கிழமை ( இன்று) பாராளுமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, இன்று காலை சபாநாயகர் ஓம்பிர்லாவை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆசம்கான் ஆகியோர் தனியாக சந்தித்துப்பேசினர். பின்னர், மக்களவை கூடியபோது உறுப்பினர்கள் அனைவரின் மத்தியிலும் ஆசம் கான் மன்னிப்பு கேட்டார்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |