பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய பட்டதற்கு இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் ஒருசில அரசியல்கட்சிகள் மட்டுமன்றி பாகிஸ்தானும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியாவில் உள்ள ஒருமாநிலத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? என்று உலகநாடுகள் கேள்வி எழுப்பிய நிலையில், பாகிஸ்தானின் ஆவேசமான கருத்துக்கள் அமெரிக்காவை அதிருப்தி அடைய செய்துள்ளது

இந்தியாவுடன் தூதரக உறவை முடித்துக்கொள்வோம் என்றும், இந்தியாவின் உடனான போக்குவரத்து உறவையும் முடித்துக்கொள்வோம் என்றும் பாகிஸ்தான் நேற்று அறிவித்து இருக்கிறது ,

அமெரிக்கா எச்சரிக்கை

* காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாமீது தாக்குதல் நடத்துவதற்கும் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவும் பாகிஸ்தான் துணை போகக்கூடாது

* காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் மீண்டும் ஒருபுல்வாமா தாக்குதல் நடைபெறும் என பாகிஸ்தான் கூறியுள்ளது சரியல்ல ,,

* சிறையில் இருந்த என்ற தீவிரவாதியை விடுதலைசெய்வதாக மிரட்டுவது ஏற்கத்தக்க செயல் அல்ல

* மேலும் தனது சொந்தமண்ணில் வேரூன்றிய தீவிரவாதத்தை அடக்கதான் எந்த நாடும் நினைக்கும் அந்த நிலைப்பாட்டைதான் இந்தியா எடுத்துள்ளது இது வரவேற்க தக்கசெயல் தான்

* பாகிஸ்தான் தன் நாட்டில் வேரூன்றிய தீவிரவாதத்தை இருக்கும் தீவிரவாதத்தையை தடுக்க நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்

என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அதேநேரத்தில் வெளிப்படைத்தன்மையும் அரசியல் பங்கேற்பு ஜனநாயகத்தின் அம்சங்கள் என்றும் இவற்றை இந்திய அரசு பின்பற்றும் என்று நம்புவதாவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அனைத்து மக்களுக்கும் ஒரேசட்டம் ஒரே விதமான பாதுகாப்பு என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் தீவிரவாத செயல்களுக்கு துணைபோக கூடாது என்றும் அமெரிக்கா அந்த அறிக்கையில் அறிவுறுத்தி உள்ளது.!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...