ஜம்மு காஷ்மீரிலும் லே (லடாக்) பகுதியிலும் அதிகம் சுற்றியிருகிறேன். லேயைப் பார்த்தபோது இந்தப் பகுதிக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் என்றே தோன்றியது. மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகிய நான்கு விஷயங்களாலும் ஜம்மு காஷ்மீரத் திலிருந்து அந்நியப்பட்ட லே பகுதி மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரே 100 ஆண்டுகள் பின்னால் இருந்தது என்றால் லே அதைவிடவும் பின் தங்கிக் கிடந்தது. எனவே லேயை ஜம்மு காஷ்மீரிலிருந்து பிரித்தது மிகவும் சரி. அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த விசேஷ அந்தஸ்தை ரத்துசெய்ததும் அந்த மாநிலத்துக்கு மிகவும் நன்மை செய்யக் கூடிய ஒன்று.
தீவிரவாதிகளின் நடவடிக்கைகளால் காஷ்மீர் மக்கள் நமக்குக் கிடைக்கும் வசதிகளைக்கூட அனுபவிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த விசேஷ அந்தஸ்தே அவர்கள் கழுத்தில் பாரமாக தொங்கிக் கொண்டிருந்தது. வேறு மாநிலத்துக்காரர்கள் அந்தமாநிலத்தில் சொத்துவாங்க முடியாது என்பதால் அங்கே நிலமும் சொத்தும் வைத்திருந்தவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.
நூறு கிலோ தங்கத்தை வைத்துக்கொண்டு பட்டினி கிடந்த கதைதான். பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் எதுவுமே இன்றைய நவீன காலத்துக்குரியனவாக இல்லை. சுருக்கமாகச் சொன்னால், நூறு ஆண்டுகள் பின்னே இருந்தது ஜம்மு காஷ்மீர்.
ஏழ்மை தலைவிரித்து ஆடியது. 25 ஆண்டுகளுக்கு முன்னே சுஜாதா எழுதினார், பத்ரிநாத் கேதார்நாத் போகும் யாத்ரீகர்கள் கடவுளை தரிசித்து புண்ணியம் கட்டிக் கொள்ளும் போது கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு கம்பளிப் போர்வை எடுத்துச் செல்லுங்கள், அங்கே உள்ளவர்கள் மைனஸ் பத்து டிகிரி குளிரில் ஸ்வெட்டர்கூட இல்லாமல், போர்வை கூட இல்லாமல் நடுங்கிச் சாகிறார்கள் என்று. அதே நிலைமைதான் இன்னமும் நிலவுகிறது.
ஜம்முவில் வைஷ்ணோ தேவியைப் பார்க்க கீழேயிருந்து ஏழுமணி நேரம் மலை மீது நடக்க வேண்டும். படிக்கட்டுகள் உண்டு என்றாலும் பல இடங்களில் செங்குத்தாக இருக்கும். அதற்கு உங்களை மட்டக்குதிரையில் அமர்த்தி அந்தக் குதிரையைச் செலுத்துபவர்கள் நடந்துதான் செல்வார்கள். அவர்களைப் போன்ற ஏழைகளை உலகில் காண்பதரிது. கிழிந்து போன ஸ்வெட்டர்களை அணிந்திருக்கும் அவர்கள் முஸ்லீம்கள். எலும்பும்தோலுமாக இருப்பார்கள். அத்தனை உயரத்தையும் இரண்டு முறை ஏறி இறங்குவார்கள். வருஷத்தில் நாலைந்து மாதம் தான் வேலை. மற்ற மாதங்களில் பட்டினி.
சொர்க்கமே பூமியில் இறங்கியிருக்கிறது என்பதுபோல் தோற்றம் தரும் காஷ்மீர் மக்கள் வெறும் சுற்றுலாவை நம்பி உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் தீவிரவாதிகளால் அங்கே சுற்றுலாத் துறையே செயலில் இல்லை. எங்கே திரும்பினாலும் கொடும் வறுமையையே நீங்கள் காண முடியும்.
வைகோ நாராசமாக ஆங்கிலத்தை தமிழ் மேடைப் பேச்சு போல் பேசுகிறார். ஆங்கிலத்தை அப்படிப் பேசவே கூடாது.
வரலாறு நிரூபித்தது என்னவென்றால், காங்கிரஸின் காஷ்மீர் கொள்கை எத்தனை தவறானது என்பதைத்தான்.
அதை நீங்கள் ஒரே ஒரு சுற்றுப் பயணத்தின் மூலம் – ஒவ்வொரு காஷ்மீரியும் எப்படி வாழ்கிறான் என்பதை கவனிப்பதன் மூலம் – தெரிந்து கொள்ளலாம். அந்த நிலத்திலேயே நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த பண்டிட்டுகளை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அங்கிருந்து விரட்டினார்களே, அப்போது உங்கள் வரலாறு எங்கே ஒளிந்து கொண்டிருந்தது?
இந்திய நாட்டின் குடிமகன் யாரும் காஷ்மீரில் குடியேற முடியாது; சொத்து வாங்க முடியாது. ஆனால் பர்மாவிலிருந்து விரட்டப்பட்ட ரோஹின்யா அங்கே போய் குடியேறலாம். சொத்து வாங்கலாம். காரணம், அவன் முஸ்லீம். இந்தியா எப்போது மத அடிப்படையிலான நாடாக மாறியது
காஷ்மீர் பெண்களை ஒரு இந்தியன் மணம்செய்து கொண்டால் அவனுக்கு அங்கே வாக்குரிமை கிடையாது. ஆனால் ஒரு பாகிஸ்தானி முஸ்லீம் அவளை மணந்து கொண்டால் அவனுக்கு வாக்குரிமை உண்டு. இதையெல்லாம் உங்கள் வரலாறு – நீங்கள் குறிப்பிடும் quote unquote வரலாறு – கண்ணை மூடிக் கொண்டுதானே பார்த்துக் கொண்டு இருந்தது?
காங்கிரஸின் காஷ்மீர் கொள்கை இதுவரை காஷ்மீரை சுடுகாட்டைப் போல் ஆக்கி விட்டது.
அமீத் ஷாவுக்குக் கொஞ்சம் வழி விடுங்கள். ஒரு ஜனநாயக நாட்டில் எல்லா மாநிலமும் ஒன்றுதான். எல்லா மதத்தினரும் ஒன்றுதான். யாருக்கும் எந்த விசேஷ சலுகையும் கொடுக்கப்படலாகாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளை இதில் சேர்க்கக் கூடாது. அது சமூக நீதியின் பாற்பட்டது. அதிலும் கூட சில rational சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். பிஎம்டபிள்யூ காரில் வந்து இறங்கி எனக்கு இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கும் அபத்தங்களும் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன.
#வைகோவின்பாராளுமன்றப்பேச்சுஒருஜோக். மோடியை, அல் குவைதா பெயரைச் சொல்லி, ட்ரம்பின் பெயரைச் சொல்லி, சீனாவின், பாகிஸ்தானின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார். அவர்களெல்லாம் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்களாம்.
அப்படியானால் இந்தியாவின் ஒரு உள்நாட்டு விவகாரத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டுமானால் மோடி ட்ரம்ப் சாருக்கு ஒரு போன் போட்டு அவர் என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும்? அல் குவைதாகாரருக்கு ரகசியத் தூது அனுப்பி அவர்கள் கருத்தையும் கேட்க வேண்டும்? அப்படியே சீனாவுக்கும் பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹீமுக்கும் போன் போட்டு அபிப்பிராயம் கேட்டு அதன் பிறகே முடிவு எடுக்க வேண்டும்?
இல்லையா “தோழர் வைகோ” அவர்களே? என பதிவு செய்துள்ளார்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |