பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்களை வரவேற்பதாக முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் உரைகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், குடும்ப கட்டுப்பாட்டை வலியுத்திய பிரதமர் சிறுகுடும்பம் என்பது தேசபக்தி கடமை என்று பேசியதை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
இரண்டாவதாக, செல்வங்களை உருவாக்குவது தேசியசேவை, அதனை உருவாக்குபவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது, செல்வம் உருவாக்கப்பட்டால்தான் அதனை அனைவருக்கும் விநியோகிக்க முடியும் என்று, பிரதமர் மோடி பேசியதை வரவேற்றுள்ள சிதம்பரம், பிரதமர் சத்தமாகவும் தெளிவாகவும் வெளியிட்டுள்ள இரண்டாவது அறிவிப்பை மத்திய நிதியமைச்சரும், அவர் துறையின்கீழ் வரும் வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கேட்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மூன்றாவதாக, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை வரவேற்பதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |