பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியிலுள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அதில், முப்படைத் தளபதி பதவி, ஒரே தேசம் – ஒரேதேர்தல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் உரையாற்றினார்.
பிரதமர் மோடியின் உரை தொடர்பாக பாஜக செயல்தலைவர் ஜெ.பி. நட்டா கூறுகையில், இதுமிகவும் ஊக்கம் தரக்கூடிய உரையாக அமைந்தது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. விரைவில் வளர்ச்சி யடைந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றார்.
மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதிகரித்துவரும் மக்கள்தொகை குறித்து பிரதமர் மோடி பேசியதை வரவேற்றார்.
அத்துறையின் இணையமைச்சர் சஞ்சீவ் பால்யான் கூறுகையில், மக்கள் தொகைப் பிரச்னையை, எந்த மதத்துடனோ அல்லது ஜாதியுடனோ தொடர்புபடுத்தக்கூடாது. நாட்டின் மக்கள்தொகை மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டுவரத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டுமக்களின் நல்வாழ்வுக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும் என்றார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |