இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் மாற்றியுள்ளார்

7 ஆண்டுகளில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி பாஜகசார்பில் நேற்று ‘சேவை தினம்’ கொண்டாடப்பட்டது. நாடுமுழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில் பெரியளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.

பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான மத்திய அரசு 7 சாதனை ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, பிரதமர நரேந்திர மோடிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
வளர்ச்சி, பாதுகாப்பு, பொது மக்கள் நலன் மற்றும் முக்கிய சீர்திருத்தங்களின் ஈடுஇணையற்ற ஒருங்கிணைப்பின் தனித்துவமான உதாரணத்தை மோடி அரசுஅளித்துள்ளது.

இந்த 7 ஆண்டுகளில், நரேந்திர மோடி, தனது உறுதியான, முழுமையான நலத்திட்ட கொள்கைளால், நாட்டின் நலன் தான் மிக முக்கியம் என ஒருபுறமும், மறுபுறம் ஏழைகள், விவசாயிகள் மற்றும் பின் தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றியுள்ளார்.

‘‘ கடந்த 7 ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடியின் சேவை மற்றும் அர்ப்பணிப்பில் அசைக்கமுடியாத நம்பிக்கையை நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தினர். அதற்காக, நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாம் அனைத்து சவால்களையும் வெல்வோம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை தடைகள்இன்றி தொடர்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
என அமித்ஷா கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகம ...

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகமது முயிசு கருத்து  'எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர்கள் என ...

பிரதமர் மோடியின் நவராத்திரி வி ...

பிரதமர் மோடியின் நவராத்திரி விரதம் பிரதமர் நரேந்திர மோடி தனது சிறுவயது முதலே நவராத்திரி ...

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு ப ...

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் ஹரியானா தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதம ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு க ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைக்கிறது -அமித்ஷா குற்றம் சாடியுள்ளார் இளைஞர்களை போதைப்பொருட்களின் இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைத்து செல்ல ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...