சர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை பிடித்த மோடி

சர்வதேச அளவில் ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடரும் தலைவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிரதமர் நரேந்திரமோடி பெற்றுள்ளார். 2009-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினார். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டுவருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 43லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 5 கோடியை தாண்டி உள்ளது.

இதன்மூலம் 10 கோடியே 80 லட்சம் பேர் பின்தொடரும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் 6 கோடியே 40 லட்சம் பேர் பின் தொடரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்குபிறகு ட்விட்டரில் அதிக பேர் பின்தொடரும் பட்டியலில் மோடி 3-வது இடத்தை மீண்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் உலகளவில் அதிகம்பேர் பின்தொடரும் தலைவராக மோடி உள்ளார். அவரை 2 கோடியே 50 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

அதிகபட்சமாக பிரதமர் அலுவலகத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் 3 கோடியே 70 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தை 3 கோடியே 4 லட்சம்பேரும், மோடியின் பேஸ்புக் பக்கத்தை 4 கோடியே 48லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...