காஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்

ஐ.நா.,மனித உரிமை ஆணையகூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்நாடு தாக்கல் செய்த மனுவில், காங்., எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு காங்கிரஸ் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சீனாவைதவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவில்லை. இதனால், சர்வதேச அமைப்புகளில் இந்தவிவகாரத்தை எழுப்ப உள்ளதாக அந்நாடு கூறியது. இதன் இடையே, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டம் இன்று (செப்.,9) முதல் வரும் 27 வரை நடக்க உள்ளது.

இந்நிலையில், இந்தஆணையத்தில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 115 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பாகிஸ்தான் தாக்கல்செய்துள்ளதாகவும், அதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், காஷ்மீர் சிறப்பு சட்டம்ரத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களையே கூறிவந்தன. பாகிஸ்தானின் குரலாகவே ஒலித்தன, காஸ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, மக்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்போன்ற கருத்துக்களை உதிர்த்தன. இதை தற்போது வலுவான ஆதாரமாக காட்ட பாக்கிஸ்தான் முயல்கிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாமுகம்மது குரேஷி பேசும்போது, காஷ்மீரில், மனித உரிமை மீறப்படுகிறது. இது குறித்து ஐ.நா., விசாரணை நடத்த வேண்டும். காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டும். இந்த குழு அமைப்பதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றார்.

இந்த கூட்டத்தில், இந்திய தரப்பில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த அஜய் பசாரியா, விஜய் தாகூர் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள், பாகிஸ்தான் கருத்துகளுக்கு, உரிய பதிலடி கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...