1971-ல்தான் ஆர்எஸ்எஸ்-ல் அவரதுபணிகள் வேகம் எடுத்தன. இம்மியளவும் தன்கொள்கையை மாற்றிகொள்ளாத போக்கினால்தான், கட்சி இவரை வாரி அணைத்துகொண்டது. ஆனால் பொறுப்புகள்வந்து சேர்ந்ததோ 1985-ல்தான்! 2001-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை என்றே சொல்லலாம். பாஜகவின் பொதுச்செயலாளர், உடனே மாநில முதல்வர் என அந்தஸ்துகளும், பதவிகளும் விறுவிறுவென உயர்ந்தன.
கடுமையான உழைப்பால் தன்னை மெருகேற்றிகொண்டதன் பலனை கட்சியில் மெதுவாக அனுபவிக்க தொடங்கினார் மோடி. அதன்பலனை கொஞ்சம் கொஞ்சமாக ருசிக்க தொடங்கினார். அதேகுஜராத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். இதற்கு சாட்சிதான் பலடீக்கடைகளுக்கு “நமோ டீக்கடை” என்று அவரால் சுண்டி இழுக்கப்பட்டவர்கள் பெயர் வைத்தார்கள்.
ஆனால் 2014-ல் புதிய சக்தியாக மோடி உருவெடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பாஜக என்ற கட்சியை நாடெங்கும் உச்சரிக்க வைத்து…உலகம் முழுமைக்கும் கொண்டுசென்றார்! இதற்கு முன்பு பண்டித நேரு, இந்திரா காந்தியே உலக அளவில் புகழ்வாய்ந்த் தலைவர்களாக விளங்கினார்கள். இதற்கு அடுத்து மோடி என்று ஆனது! மன் கி பாத் என்ற நிகழ்ச்சியை ரேடியோவில் பேசி மக்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி கொண்டார்.
அதிரடி அறிவிப்புகளால் மக்களை நிலைகுலைய வைத்தவர் என்ற அடையாளத்தையும் சுமந்துள்ள மோடி, சர்ச்சைகளின் நாயகன் என்ற பெயரையும்பெற தவறவில்லை.கள்ளநோட்டு ஒழிப்பு, பணமதிப் பிழப்பு நடவடிக்கை, வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் இந்தியாவுக்கு முதலீடு என… சர்வதேச அளவிலான பெருமையாகட்டும், 80 லட்சம் குடும்பங்களுக்கு இலவசகேஸ் இணைப்பு, எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, என உள்ளூர் திட்டங்களாட்டும்.. எல்லாமே மோடி பெயரை தாங்கி நிற்கின்றன.
மடிப்புகள், கசங்கல்கள் இல்லாத நீட்டான டிரஸ் அணிவது கூட மற்றவரைகளை ஈர்க்கும் விதமாகவே உள்ளது! யார் எவ்வளவு திட்டினாலும் அதை ஆத்திரம், ஆவேசத்தால் அணுகாதவர்! டென்ஷன் என்பதோ, பதட்டம் என்பதோ தென்பட்டதே இல்லை. உச்ச பட்சமாக முகம் வெளிறி காணப்படும். அவ்வளவுதான்.. மற்றபடி ஒரு ஸ்மைல் தான்! எப்போதுமே ஒருவித நாகரீக அரசியல்வாதியாகவே தன்னை எப்போதும் முன்னிறுத்தி கொள்ளும் இந்த ஏழைத் தாயின் மகன் நீடூடி வாழ நாட்டு மக்களின் வாழ்த்துக்கள்!