இந்தியாவை நிர்மாணித்த நமது முன்னோர்கள் கண்டகனவு நிறைவேறிவிட்டதா? மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயலாமல் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டதா.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவிக்குவந்தபிறகு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முந்தைய ஐந்தாண்டு ஆட்சியின்போது பண மதிப்பு நீக்கம், ஒரே நாடு ஒரே வரி ஆகிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதனை எதிர்க்கட்சிகள் குறைக் கூறுகின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போது மக்கள் மனதில் ஒருகேள்வி எழுந்துள்ளது.
நமது முன்னோர்கள் கண்ட கனவு நிறைவேறிவிட்டதா ? மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலாமல் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டதா என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தினந்தோறும் ஊழல் என்ற செய்திகள் தான் வெளிவந்தன. எல்லைகள் பாதுகாப்பாக இல்லை. நமது வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. பொதுமக்கள் வீதிக்கு வந்து தினமும் போராடினார்கள். அரசு இயந்திரம் முடங்கி இருந்தது.
முக்கிய முடிவுகளை எடுக்க காங்கிரஸ் தலைமையிலான அரசு தவறியது. ஒவ்வொரு அமைச்சருமே நான்தான் பிரதமர் என்று ஆட்டம் போட்டார்கள். ஆனால் உண்மையான பிரதமர் நாட்டின் பிரதமர்போல் செயல்படவில்லை.
அதே சமயத்தில் முந்தைய ஆட்சிபோல அல்லாமல், நமது பிரதமர் மோடி எந்த ஒரு முடிவையும் ஓட்டு வங்கியை கணக்கில்கொண்டு எடுத்ததே இல்லை. மக்களின் நலன்களை கருதியே அவர் முடிவு எடுத்தார்.
சில அரசுகள் 30 ஆண்டுகள் பதவியில் இருந்து ஏதாவது ஒரு பெரிய முடிவை மட்டுமே எடுப்பார்கள். ஆனால் எங்கள் அரசு 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 50 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. வேறு எந்த ஆட்சியும் எடுக்கபயப்படும் முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 விதியை ரத்து செய்தது அகண்ட பாரதத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முக்கியமுடிவு.
இந்தியாவின் எல்லைக்குள் நடக்கும் ஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் அகில இந்திய மானேஜ்மண்ட் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இந்தியாவின் அரசியல் வரலாறு அதன் கொள்கை பரிமானங்கள் ஆகியவை குறித்து பேசியது.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |