இன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள். இந்த நாள் இந்திய வராலாற்றின் பென்னெழுத்தால் பொறிக்கத் தகுந்ததொரு நாள்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
“இனி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபாரமானதாக இருக்கும். இன்னும் பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் இன்றைக்கு இருப்பதை விடவும் முற்றிலும் வளர்ந்த ஒன்றாக, உலக நாடுகளுக்கு இணையான ஒன்றாக இருக்கும்.”
எது இந்தியாவில் நடக்கவே நடக்காது என்று எல்லோரும் எதிர்பார்த்தார்களோ அது இன்றைக்குத் தூள், தூளாக உடைக்கப்பட்டிருக்கிறது. ஹார்வர்டில் படித்த பொருளாதார “மேதைகள்” செய்யத் துணியாத ஒன்றை மிகத் துணிச்சலாக நிர்மலா சீதாராமன் அவர்கள் செய்து காட்டியிருக்கிறார் இன்று. ஒரு பெண்மணியாக, அதுவும் தமிழ்ப் பெண்மணியான நிர்மலா சீதாராமனைக் குறித்துத் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய நேரமிது.
நாடு பெரும் பொருளாதாரத் தேக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் இந்தத் துணிச்சலான முடிவு மிக, மிக, மிக அவசியமான ஒன்று. இதுபோன்ற முடிவுகளை மோடி அரசாங்கம் மட்டுமே எடுக்க இயலும் என்பதினை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
கார்ப்போரேட் வரியை 22 சதவீதமாகக் குறைத்திருப்பதால் இனி உள்நாட்டுத் தொழில்துறை முதலீடுகள் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். கையில் காசை வைத்துக் கொண்டு என்னசெய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இதுவொரு ஜாக்பாட்தான்.
வழக்கம்போல மூடர்கள் வசைபாடுவார்கள். தங்களின் தற்குறித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வார்கள். அவர்களைக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
ஹமாரா தேஷ் சச்மே பதல்ரஹாஹே!
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |