இந்திய மக்களால் அதிகம்விரும்பும் தலைவர்களின் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.பிரிட்டனை சேர்ந்த யுகவ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒருஆய்வை மேற்கொண்டது. அதில் சர்வதேச அளவிலான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு அதில் யார் அதிகம் மக்களால் விரும்பப்படுபவர்கள் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
41 நாடுகளில் அதாவது அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்டவற்றில் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவில், உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, நடிகர் ஜாக்கி சான், சீன அதிபர் ஜி ஜின்பிங், அலிபாபா நிறுவனர் ஜாக் மா அடுத்தடுத்த இடங்களை தக்கவைத்து கொண்டனர். உலகளவிலான தரவரிசையில் நமது பிரதமர் பிரதமர் நரேந்திரமோடி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
10வது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 14வது இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 17வது இடத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 16வது இடத்தில் நடிகர் ஷாருக்கான், 18வது இடத்தில் சல்மான்கான் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அளவிலான ஆண்கள் பிரிவில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். கிரிக்கெட்வீரர் தோனி 2-ம் இடத்தில் உள்ளார். ரத்தன் டாடா, பராக் ஒபாமா, பில்கேட்ஸ், நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் அணிகேப்டன் விராட் கோலி, ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர்.
இந்திய அளவிலான பெண்கள் பிரிவில் குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் (10.36%) முதலிடத்திலும் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி (9.46%) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |