பாகிஸ்தானுடனான யுத்தத்தின்போது நேரு ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தத்தை அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது, 1948-ல் காஷ்மீர் பிரச்சனையை ஐநாவுக்கு நேரு கொண்டுசென்றது இமாலயத் தவறு. அது இமயமலையைவிட மிகப் பெரும் தவறு
ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மூன்றடுக்கு பஞ்சாயத்துமுறை முழு அளவில் செயல்பட தொடங்கும். காஷ்மீரில் சூஃபி சாதுக்களின் கலாசாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டபோது மனித உரிமை பேசும் காவலர்கள் எங்கே போனார்கள்? ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் விரட்டி அடிக்கப் பட்ட போது அவர்கள் எங்கே போனார்கள்?
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவால் காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தனர். காஷ்மீர் விவகாரத்தில் யார் தவறு இழைத்தார்களோ அவர்களே வரலாற்றையும் எழுதினார்கள். அதனால் உண்மைகள் மூடிமறைக்கப்பட்டன. அந்த வரலாற்றை திருத்தி எழுதுகிறநேரம் இது. இப்போதும் கூட 370-வது பிரிவு பற்றியும் காஷ்மீர் குறித்தும் வதந்திகள் கிளப்பிவிடப் படுகின்றன.
அவற்றுக்கு விளக்கம்சொல்ல வேண்டியது மிக முக்கியம். காஷ்மீரில் எந்த ஒருகட்டுப்பாடும் விதிக்கப்பட வில்லை. 370-வது பிரிவு நீக்கப்பட்டதை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் ஆதரிக்கிறது. அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகளில் ஜம்முகாஷ்மீர் மிகவும் வளர்ந்த பிராந்தியமாக உருவெடுக்கும். இதற்கு காரணம் ஆகஸ்ட் 5-ந் தேதி 370-வது பிரிவை நீக்குவது என பிரதமர் மோடி எடுத்தமுடிவுதான்.
காஷ்மீரில் 196 காவல் நிலையங்களில் 8-ல் தான் ஊரடங்கு அமலில் உள்ளது. அதுவும்கூட 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடத்தான் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. காஷ்மீரில் 41,800 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். ஆனால் யாரும் மனித உரிமை மீறல் என எந்தபுகாரும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி தொடர்புகள் செயல் இழக்கப் பட்டது கூட மனித உரிமை மீறல்கள் என புலம்புகின்றனர். அரசியல் சானத்தின் 370-வது பிரிவு நீக்கமானது இந்தியாவின் ஒற்றுமையை வலிமைப்படுத்தியிருக்கிறது.
நன்றி அமித்ஷா .
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |