தேச நலனே எங்களுக்கு மிகமுக்கியம். தேச நலனுக்கென மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக் குரியது. நாட்டில் சிலர் வன் முறைகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனை ஏற்க முடியாது.சமூகத்தில் சில அருவருக்கதக்க சம்பவங்கள் வன்முறைகள் நடக்கிறது. இது இந்ததேசத்தையும், இந்து மக்களையும் இழிவுப் படுத்துவதற்காக திட்மிட்டு நடக்கும் சதியாகும்.
லோக்சபா தேர்தலுக்கு பின்னர் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இது உலகளவில் வளர்ந்திருப்பதை காணமுடிகிறது. எல்லையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதம் குறைந்துள்ளது. ஜன நாயகத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு அனைவரும் ஒத்துபோக வேண்டும் என்பதல்ல. அதேநேரத்தில் சுயநல நோக்கு இருக்கும் விஷயத்தில் தேசநலனை சமரசம் செய்துகொள்ள முடியாது.
சில சமூக வன்முறைகளை, கும்பல்படுகொலை என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இதன் மூலமாக, நமது நாடு, இந்துகலாச்சாரம் ஆகியவற்றின் புகழை கெடுப்பதோடு, சமூகங்கள் நடுவே பயத்தை உண்டு செய்கிறார்கள்.
கும்பல் படுகொலை என்பது, இந்தியாவுக்கு தொடர்பற்றது. இந்தவார்த்தையே மேற்கத்திய கட்டுமானம். நமது பண்பாட்டில் இப்படி ஒருவார்த்தைக்கே இடம் கிடையாது. வேறு ஒருமதத்தின் கோட்பாட்டில் உள்ள வரிகளை நம் மீது சுமத்துகிறார்கள். இந்தியர்கள் மீது இதுபோன்ற வார்த்தைகளை இனிமேலும் யாரும் சுமத்தகூடாது. கொலைச் சம்பவங்கள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. இந்தநாட்டின் மக்கள் சகிப்புத்தன்மையோடு வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த கொள்கைக்காக, பங்களிக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சில பிற்போக்கு சிந்தனை கொண்ட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழக்கூடியவர்கள், அரசின் இந்த நடவடிக்கையை, எதிர்க்கிறார்கள். இந்தியா வலிமையான நாடாக மாறி விடக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். அவர்கள்தான் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற, தசரா, நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசியது
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |