இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும்

விஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு நேரில்சென்று தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் நேற்று தரிசனம் செய்தார். குடுமியான்மலை, ஆவுடையார் கோயில் உள்பட ஊர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்ற வானதி ஸ்ரீனிவாசன் பின் சித்தன வாசலில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வருவதால், அது உலகப்புகழ்மிக்க சுற்றுலாத் தலமாக விரைவில் மாறும். இந்த நிகழ்ச்சி இருபெரும் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்வு குறித்து, நீதிமன்ற வழிக்காட்டுதல்படி டிஜிட்டல்பேனர்கள் வைப்பதில் தவறு ஏதுமில்லை.

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் நாங்கள் அதிமுக.,வுக்கு ஆதரவளிக்கிறோம். அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். பிரச்சாரத்தில் பங்கேற்பவர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இடைத் தேர்தல் நடக்கும் 2 சட்டசபைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி, அமோக வெற்றிபெறும்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டும். தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் கட்சியாக பாஜக உள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதைக் கட்சியின் தலைமை அறிவிக்கும்.

ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம் தான். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலே, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் தான் நடக்கிறது. இந்த சூழலில், இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது வருத்தம் தரக்கூடிய ஒன்று. காவல் துறையினரே ஆர்எஸ்எஸ் மீது அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்துகிறார்கள். காவல் துறையினரின் இந்த போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்போதைய சூழலில் அரசுப்பள்ளிகளை மூடுவதுக்கான காரணம் யார் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும். நமக்குப்பிடித்த மொழியை நாம் கற்றுக்கொள்ளலாம். நம் மொழியைக் காக்கும் முயற்சியை திமுக முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...