சீனா அதிபர் ஸி ஜின்பிங்கை அக்டோபர் 11,12 ஆகிய நாட்களில் பிரதமர் மோடி சந்தித்துபேச உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான 2-வது சந்திப்பு அக்டோபர் 11 முதல் 12-ந் தேதி வரை நடைபெறும்.
இச்சந்திப்பின்போது பிராந்திய மற்றும் சர்வதேசளவிலான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். இச்சந்திப்பு மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில்நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது எந்த வித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் 13-ல் ஜின்பிங் நேபாளத்துக்கு அரசு முறை பயணமாக செல்கிறார்.
இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்காக கடற்கரை நகரமான மாமல்லபுரம் கோலாகலமாக தயாராகிவருகிறது. மாமல்லபுரத்தில் புராதான சிற்பங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருதலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் ஆவலுடன் களைகட்டிவருகிறது.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |