பிரதமர் நரேந்திரமோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்பு, இன்று தொடங்கி 13-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 1956-ம் ஆண்டு, அப்போது சீன அதிபராக இருந்த சூ என் லாய் இந்தியா வந்திருந்தார். அதன்பின், 3 ஆண்டுகள் கழித்து சீன அதிபர் இந்தியா வரவந்துள்ளதால் , இந்தசந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்கள் என இரு நாடுகளுக்கிடையேயான முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “எல்லைப் பாதுகாப்பு பிரச்னையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சீனா, தற்போது இரு நாடுகளுக் கிடையேயான உள்நாட்டுப் பிரச்னைகளை அந்தந்த நாடுகளே பேசித் தீர்வுகாண வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியாவை சந்தோஷப்பட வைக்கிற ஒன்றுதான். இரு நாட்டு அதிகாரிகள் சந்திக்கும்போது, உள்நாட்டு விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதே முக்கிய நோக்கமாக இருக்கும். ஆனால், தற்போது இருக்கும் பொருளாதார மந்தநிலையில், இந்தியா – சீனா இடையேயான வர்த்தக ஆலோசனைகளும் இடம்பெறலாம். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி, ஏற்றுமதி அளவை அதிகரித்து, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் சீனர்கள், இந்தியர்களை விட முன்னேறி இருக்கின்றனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இந்தியாவிற்கும் சாத்தியப்படுத்தத்தான் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் இடையிலான முதல் உச்சிமாநாட்டைப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமான வுஹான் நகரில் சீனா நிகழ்த்தியது எனத் தகவல்கள் வெளியாகின. அதேபோன்று, இரண்டாவது சந்திப்பிற்கு, இந்தியா மாமல்லபுரத்தை தேர்வு செய்வதற்கும் ஒருகாரணம் இருக்கிறது. போதி தர்மர் பௌத்த மதத்தைப் பரப்ப, காஞ்சிபுரத்திலிருந்துதான் சீனா சென்றார். அவரின் நினைவாகத்தான் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது எனச் சொல்லப்பட்டாலும், தனது பொருளாதார சக்தியை நிரூபித்த சீனாவிற்கு, இந்தியாவின் கலையுணர்வை நிரூபிக்க மாமல்லபுரம் தேர்வுசெய்யப்பட்டி ருக்கலாம். சீனா, இந்தியாவைவிட பொருளாதாரத்தில் வளர்ச்சி மிக்க நாடாக இருப்பதற்கு இந்தியர்களும் ஒரு முக்கியக்காரணம். ஏனெனில், சீனாவில் உற்பத்தி இருக்கும் அளவிற்கு அதை வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இல்லை. இந்தியாவில் பணப்புழக்கம் அதிகம் என்பதால் இங்கு பொருள்களை வாங்கிப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதை சீனா தனக்குசாதகமாகப் பயன்படுத்தி, சீனப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன்மூலம் அந்நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொண்டது. உதாரணமாக, கடந்த ஒரு வாரத்தில், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக 19 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் விற்பனைஆகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதில் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர், மற்ற எலெக்ட்ரானிக் பொருள்கள் என 80 சதவிகிதபொருள்கள் சீனப் பொருள்களாகத்தான் இருக்கும்
இந்தியா – சீனா இடையேயான வர்த்தகத்தில், சீனாவுக்குத்தான் மிகவும் சாதகமான சூழல்நிலவுகிறது. சீனாவிலிருந்து விளையாட்டுப் பொருள்கள் முதல் எலெக்ட்ரானிக் பொருள்கள் வரை ஏராளமான பொருள்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் அளவில் மூன்றில் ஒரு பங்குதான் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறோம்.
“இந்தியாவில் எளிமையாக உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள பொருள்கள்கூட விலை மலிவு என்பதற்காக சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உதாரணமாக, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப் டாப்பை கூட சீனாதான் உற்பத்திசெய்து கொடுத்தது. இதுபோன்ற ஒவ்வொரு இறக்குமதியிலும் சீனாவின் அந்நியச் செலாவணி அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதால், ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய – சீனா நாடுகளுக்கிடையே ஏற்றுமதி, இறக்குமதி குறித்தும் பேசப்படலாம்.
ஏற்றுமதியில், இந்தியா சீனாவைவிட பின்தங்கியநிலையில் இருப்பதால், எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலை என்று சொல்லிவிடமுடியாது. இந்தியாவிடம் கல்வி என்ற ஆயுதம் வலிமையாக இருக்கிறது. சீனர்களை ஒப்பிடும்போது, இந்தியர்கள் கல்வித்தரத்தில் உயர்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் கல்விவசதியில், 60 சதவிகிதம் மட்டுமே சீனாவில் உள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போதைய பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்யவும், இந்திய- சீனா இடையே இந்தியாவின் அந்நியச் செலா வணியை அதிகரிக்கவும் இந்தியா புதிய வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்க வேண்டும். அதில் ஒரு வழி, இந்தியக் கல்வி நிறுவனங்களை சீனாவில் தொடங்கும் முயற்சி. இதன்மூலம் நமக்கு நிறைய நன்மைகள் நடக்கும். இந்தியாவின் அந்நியச் செலாவணியையும் அதிகரிக்க முடியும்.”
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
3patrician