சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக சென்னைவந்த பிரதமர் நரேந்திர மோடி, மகாபலிபுரம் கடற்கரையில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, தான் கடலுடன் மேற்கொண்ட உரையாடலை இந்திமொழியில் கவிதையாக எழுதியுள்ளார்.
இதுதொடர்பான தனது கவிதையை இன்று சமூகவலைதளங்களில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதுபற்றிய முன்னுரையில்,“மாமல்ல புரத்தில் கடலில் நடந்து நான், கடலில் தொலைந்து போனேன். இந்த உரையாடல் என் ஆத்ம உலகம். இதை உங்களோடு வார்த்தைகளில் பகிர்ந்துகொள்கிறேன்” என கூறியுள்ளார்.
8 பத்திகளில் எழுதி, அவரால் கையெழுத்திடப்பட்ட அந்தகவிதையில், சூரியனுடனும், அலைகளுடனுமான கடலின் உறவையும், அதன் வலியையும் உணர்வுப்பூர்வமாக விவரித்துள்ளார்.
இதனிடையே, மாமல்லபுரத்தில் தங்கியிருந்த மோடி, அதிகாலை நடைபயிற்சிக்காக கடற்கரை சென்றார். இதுதொடர்பான புகைப் படங்களையும் தனது ட்வீட்டர் பதிவில் பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.
கரையோரத்தில் இருந்த குப்பை களை அகற்றும் சுமார் 3 நிமிட வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி, கடற்கரை யோரத்தில் உடற் பயிற்சி, நடை பயிற்சியை தவிர்த்து ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் முன்னெடுப்பாகவும் அதனை பயன்படுத்தினார்.
எழுத்தைத் தவிர்த்து, பிரதமர் மோடி ஒரு தீவிர யோகா ஆர்வலராகவும் அறியப்படுகிறார். அவரது ஓய்வுநேரத்தில் சவாலான ஆசனங்களையும் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |