மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பெரிய ஹோட்டல் அதிபருக்கு எதிரான 3 வழக்குகளை வாபஸ் பெறுமாறு டெல்லி போலீசாரை வற்புறுத்தினார் என்று குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் ப. சிதம்பரம், சுனைர் ஹோட்டல்களின் அதிபர் எஸ்.பி. குப்தாவுக்கு எதிரான 3 வழக்குகளை வாபஸ்
பெறுமாறு டெல்லி போலீசாரை வற்புறுத்தினார் என்றும், அவரது தலையீட்டின்பேரில் வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டன என்றும் செய்தி வெளியானது. ப.சிதம்பரம் 1999-2003ம் ஆண்டு வரை எஸ்.பி. குப்தாவுக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.
இந்த செய்தியைப் படித்த எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்றம் கூடியதும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ப. சிதம்பரம் பதவி விலகக் கோரி அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.