ஜெர்மன் போன்ற நாட்டின் தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார சக்திகளின் நிபுணத்துவம் 2022 க்குள் “புதிய இந்தியாவை” உருவாக்க பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர் நரேந்திரமோடி இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்,
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் உடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.
இரு நாட்டு தலைவர்களும் விண்வெளி, சிவில் விமானப் போக்குவரத்து, கடல்சார் தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் கையெழுத்திட்டனர்.
மேலும் அவர் கூறுகையில் “2022 க்குள் ‘புதிய இந்தியாவை’ உருவாக்கு வதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம், ஜெர்மனி போன்ற தொழில்நுட்ப, பொருளாதார சக்தி நிறுவனங்களின் நிபுணத்துவம் இதற்கு பயனுள்ளதாக இருக்கும், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட உள்ள ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலங்களில் முதலீடு செய்ய ஜெர்மனி நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.