மனிதன் ஓர் அரசியல் விலங்கு என்று சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங்கை ஓர் அரசியல் மிருகம் என்று கூறினால் அது தவறல்ல. இப்போது உள்ள பெரும்பாலான காங்கிரஸ்காரர்களைப் போல மன்மோகன்சிங் காந்தியத்தில் நாட்டம் இல்லாதவர். அவர் ஒரே நேரத்தில் பல முகமூடிகளை அடுக்கடுக்காக அணிந்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக
நான் அதிகாரிதான் என்பதை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உள்ள முகமூடியை அவர் வெகுவிருப்பத்துடன் அணிந்து கொண்டிருக்கிறார்.
இந்திய அதிகார வர்க்கத்தை தனது தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பிரிட்டிஷார் உருவாக்கினார்கள். அது முற்றிலுமாக மாறிவிடவில்லை. இப்போதும் பிரிட்டிஷாரின் எச்சம் வெவ்வேறு ரூபத்தில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பெரும்பாலான அமைச்சர்கள், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். பிரதமர் கூட அதிகாரிகளின் கட்டுப்பாட்டு வரம்பிற்கு அப்பாற்பட்டவர் கிடையாது.
மன்மோகன் சிங் பிரதமர் ஆனதே ஓர் அதிசய நிகழ்வாகும். அவர் அரசியல் வாதியே கிடையாது, மன்மோகன் சிங் பிரதமர் ஆக்கப்பட்டதை மறைந்த அர்ஜின்சிங், தற்போதைய மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் ஆகியோர் அறவே விரும்பவில்லை. அரசியல்வாதிகள் மீது திணிக்கப்பட்டவர்தான் மன்மோகன் சிங். லஞ்ச ஒழிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டதில் மன்மோகன் சிங்கிற்கு முக்கிய பங்கு உண்டு. இதை அவர் தட்டிக் கழித்து விட முடியாது. தாமஸைப் பற்றி தவறாக எடை போட்டு விட்டேன் வேண்டுமென்றே தவறு செய்யவில்லை என்பதாக மன்மோகன்சிங் மழுப்பியுள்ளார்.
இந்திய அரசியல்வாதிகளிலேயே முதன்மையான ஓநாயாக உள்ளவர் மன்மோகன் சிங் என்ற விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்தால் இது உண்மை தான் என்பது புலனாகும். 2008ம் ஆண்டு ஜீலை மாதம் 22 தேதி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றது. எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்து தான் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மன்மோகன் சிங் தவறு இழைத்துள்ளார்.
மன்மோகன் சிங் மேற்கொண்ட நடவடிக்கை, தார்மீக ரீதியாக தவறானது தான். ஆனால் இதற்காக சட்டப்படி தண்டிக்க முடியாது என்ற வாதத்தை பலரும் முன் வைக்கிறார்கள். மன்மோகன் சிங் கட்டாயம் பதவி விலகியே தீர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் வற்புறுத்தாமல் இருப்பதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.
மன்மோகன் சிங் அரசியல் தந்திரம் தெரியாதவர் என்று கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. மன்மோகன் சிங்கின் அரசியல் தந்திரத்தை அவரது ஆதரவாளர்களும் எதிரிகளும் குறைவாக மதிப்பிட்டு வருகின்றனர். இதுவே அவருக்கு பெரும் பலத்தை தந்து வருகிறது. இதனால் தான் அவர் பல்வேறு நெருக்கடிகளிலிருந்து சுலபமாக மீண்டு வருகிறார்.
மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஒருவகையில் இந்த விமர்சனம் உண்மை தான். இந்த விஷயத்தில் அவருக்கு இணையாக யாரையும் சுட்டிக்காட்ட இயலாது. ஓர் அதிகாரி தான் செய்து விட்ட தவறை நியாயப்படுத்த அல்லது அதில் தனக்கு பங்கு எதுவும் இல்லை என்பதை நிலை நாட்ட மழுப்பலான பதிலைத் தருவது வழக்கம். இதே வழி முறையைத்தான் மன்மோகன் சிங் பின்பற்றி வருகிறார். ஓர் அதிகாரி வேண்டுமானால் இவ்வாறு கூறி தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஓர் அரசியல்வாதி, அதுவும் பிரதமர் பதவியில் அமர்ந்திருப்பவர் இவ்வாறு கூறி தப்பித்துக் கொள்ள முடியுமா? முடியவே முடியாது.
தப்பித்துக் கொள்ள முயல்வது, ஜனநாயகத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா?
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.