1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி

விலையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது .

இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்துள்ளதாவது:
விலையை கட்டுப்படுத்த ஏதுவாக 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதிசெய்வது என அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, எம்எம்டிசி நிறுவனம் வெங்காயத்தை இறக்குமதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு சந்தைகளில் தாராளமாக வெங்காயம் கிடைக்கும்வகையில் பகிர்வுபணிகளை மேற்கொள்ளவும் அந்நிறுவனம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி எம்.எம்.டி.சி நிறுவனத்தை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை நாடுமுழுவதும் விநியோகிக்க “நாபெட்’ கூட்டமைப்புக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கி யுள்ளதாக பாஸ்வான் அந்த சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார்.
வெங்காயம் அதிகம்விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் கனமழை காரணமாக அதன் உற்பத்தி 30-40 சதவீதம் வரை சரிவடைந்தது. இதனால், சந்தையில் வரத்துகுறைந்து ஒரு கிலோ வெங்காயத்தின் விலை கடுமையாக  அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...