தீர்ப்புக்கு தலைவர்கள் கருத்து

அயோத்தியில் சர்ச்சைக் குரிய இடத்தில் ராமர்கோவில் கட்ட அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தர விடப்பட்டது.

இதையொட்டி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இது.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி :
இந்தத் தீர்ப்பையடுத்து, பழையதை மறந்து, அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி உடையதாக இந்தியாவை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நம்முடைய விருப்பத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இந்ததீர்ப்பு இந்தியாவின் சமூக இழையை பலப்படுத்தும். இந்த வரலாற்று தீர்ப்புக்கு பின்னர் அனைவரும் அமைதியை, நல்லிணக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும்.

மத்திய போக்கு வரத்து மந்திரி நிதின்கட்காரி 

அயோத்தி விவகாரத்தில், ஜனநாயக நாட்டின் மக்கள் என்ற வகையில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும். நாம் அனைவரும் நீதித் துறை மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி 

நாட்டு மக்களுடன் இணைந்து, இந்தத்தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதன் மூலம் என்னுடைய நிலைப்பாட்டுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டும் என்பதற்கான முயற்சிக்கு, கடவுளின் ஆசி கிடைத்துள்ளது..

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 

இந்த நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள். அனை வரும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் 

சுப்ரீம் கோர்ட்டு ஒரு மனதாக வழங்கிய தீர்ப்பு, நாட்டின் முன் உள்ள மிகப் பெரிய பிரச்சினைக்கு தீர்வுகாண உதவி உள்ளது. அனைவரும் வரவேற்க வேண்டும்.

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே 

ராமர் கோவில் போராட்டத்தில் கரசேவகர்களின் தியாகம் வீணாக வில்லை. ராமர் கோவில் விரைவாக கட்டப்பட வேண்டும்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு 

மரியாதைக்குரிய நீதிபதிகள் எடுத்துள்ள ஒரு மனதான முடிவை மதிக்க வேண்டும். அனைவரும் அமைதியையும், நல்லிணக்க த்தையும் காக்கவேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 

அம்பேத்கர் உருவாக்கிய மதச் சார்பற்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்கது. நாம் மதிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் தேவே கவுடா 

இது ஒரு சமநிலையான முடிவு. நான்வரவேற்கிறேன். கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் மிகப் பெரிய பிரச்சினை. அதனுள் நான் செல்ல விரும்பவில்லை.

மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் 

சுப்ரீம் கோர்ட்டு மிகத் தெளிவான, ஒருமனதான தீர்ப்பை வழங்கி உள்ளது. அனைவரின் உணர்வுகளும் தீர்ப்பில் மதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா 

இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றி. தோல்வி இல்லை. அனைவரும் முழுமனதோடு தீர்ப்பை வரவேற்போம். சமூக நல்லிணக்கமும், அமைதியும் நிலவட்டும்.

மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் 

அயோத்தி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்திருக்கிறது. இதை நாம் மதிக்கவேண்டும். எந்த வகையிலும் உற்சாகத்தை, கொண்டாட்டத்தை, போராட்டத்தை வெளிப்படுத்தி விட கூடாது.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 

சுப்ரீம் கோர்ட்டு முடிவை வரவேற்கிறோம். நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் கட்டிக்காக்க மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் வரவேற்கவேண்டும். இனி யாரும் மறு ஆய்வு கோரக் கூடாது. இது எனது வேண்டுகோள்.

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் 

நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தீர்ப்புவந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அமைதியையும், நல்லிணக் கத்தையும் காக்க வேண்டும்.

ஆந்திர முதல்–மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி 

தீர்ப்பை மதிப்போம் என இருதரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளனர். தீர்ப்பையொட்டி சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் குலைக்கிற வகையில் கருத்து வெளியிடக் கூடாது.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் 

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைக்கு சுப்ரீம்கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கி உள்ளது. பல்லாண்டுகால பிரச்சினை, முடிவுக்கு வந்துள்ளது. அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காக்கவேண்டும்.

பா.ஜனதா துணைத்தலைவர் சிவராஜ் சிங் சவுகான் 

இந்த வழக்கில் யாருக்கும் தோல்வி இல்லை. அனைவரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும். வரவேற்க வேண்டும்.

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். இரு சமூகத்தினருக்கும் மகிழ்ச்சியையும், நிவாரணத்தையும் கொண்டு வந்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ். 

இது வரலாற்று தீர்ப்பு. மிகப்பெரிய ராமர் கோவில் கட்டப்படும். முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தருவது வரவேற்கத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...