தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
‘தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிடவேண்டும்’ என, சமூக சேவகர், எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் தகவல் அதிகாரி, மத்திய தகவல் ஆணையர் அலுவலகம் ஆகியவை விசாரித்தன. அதைத்தொடர்ந்து விசாரித்த, டில்லி ஐகோர்ட்டின் மூன்று நீதிபதிகள் அமர்வு, 2010ல் தீர்ப்பு அளித்தது. ‘தகவல்அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும்’ என, தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சிவ் கன்னா அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்துவந்தது.
இந்த வழக்கில் இன்று(நவ.,13) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல்சாசன அமர்வு, தகவல் அறியும் சட்டம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கும் பொருந்தும் எனக்கூறி, டில்லி ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது. நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதித்துறை சுதந்திரத்தை காரணம்காட்டி பொறுப்பை தட்டிகழிக்க முடியாது. பொறுப்பும், சுதந்திரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என தெரிவித்துள்ளது.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |