ரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி

ரபேல் போர்விமான ஒப்பந்த முறைகேடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி வழங்கிய தீர்ப்பில்.  ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்தமுகாந்திரமும் இல்லை என்றும் கூறியது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்  பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், முந்தையதீர்ப்பை உறுதி செய்தது. அத்துடன் சீராய்வு மனுக்களை தள்ளுபடிசெய்வதாக அறிவித்தது.

அரசு வாதங்கள்”மத்திய அரசு தாக்கல் செய்த ஆதாரங்கள், வாதங்கள் இவைதான், மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பத்திரங்களை அரசு உச்ச நீதிமன்றத்தில்

மத்திய அரசு தாக்கல் செய்த ஆதாரங்கள், வாதங்கள் இவைதான்,

  • மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பத்திரங்களை அரசு உச்சநீதிமன்றத்தில் 14 பக்க அறிக்கையாக தாக்கல் செய்தது.
  • விமானம் குறித்த உண்மையான விலை விவரங்களை அளிக்க முடியாது. அப்படி விலைவிவரங்களை அளித்தால் அது இந்தியா பாதுகாப்பிற்கு பிரச்சனை ஆகும். இது ராணுவ பாதுகாப்பு தொடர்பானது என்று மத்திய அரசு கூறியது.
  • பிரான்ஸ் ஒப்பந்தத்தின் படி விலை விவரங்களை வெளியே அளிக்க கூடாது. பிரான்ஸ் அனுமதியுடன் மட்டுமே ரபேல் ஒப்பந்தம்தொடர்பான விலை விபரங்களை அளிக்க முடியும் என்று கூறியது.
  • மேலும் மத்திய அரசு, டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்தத்தாரரை அரசு தேர்வுசெய்யவில்லை. அதை தேர்வுசெய்தது டசால்ட் நிறுவனம்தான் என்று கூறியது. ஒப்பந்த முறைப்படி அதற்கான உரிமை டசால்ட் நிறுவனத்திற்குத்தான் இருக்கிறது. அதனால் அவர்கள்தான் அதை தேர்வுசெய்தது என்று கூறியது.
  • டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றேதெரியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியது.
  • மிக முக்கியமாக தாக்கல் செய்யப் பட்ட சிஏஜி அறிக்கையில், காங்கிரஸ் ஒப்பந்தத்தைவிட பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் விலை குறைவானது என்று கூறப்பட்டது.

 

இந்த வழக்குகளில் சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்புக்கள் குறித்து தலைவர்கள் கருத்து
பா.ஜ.க., தலைமை : ரபேல்விவகாரம் தொடர்பாக தவறான தகவல் அளித்ததற்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்.

ராஜ்நாத் சிங் : சுப்ரீம் கோர்ட்டின் இந்ததீர்ப்பை வரவேற்கிறேன். நமது அரசின் நிலைப்பாட்டை இது நியாயப்படுத்தி உள்ளது. நமது அரசின் வெளிப்படை தன்மையான செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்துள்ளது. பாதுகாப்புதுறை தொடர்பான விஷயங்கள் அரசியலாக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். சிலர் தங்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இதை பயன் படுத்தியது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் பிரதமர் மீது அவதூறு கூறி உள்ளனர். குறிப்பாக சில மூத்த காங்., தலைவர்களாலேயே இது நடந்துள்ளது.

மாஜி விமானப்படை அதிகாரி பி.எஸ்.தனோவா : எங்களின் கருத்து உறுதி செய்ய பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். 2018 டிசம்பரில், சுப்ரீம்கோர்ட் வழங்கி உள்ள இதே தீர்ப்பை நான் வாக்கு மூலமாக அளித்திருந்தேன். ஆனால் அப்போது சிலர், நான் அரசியலுக்காக பயன்படுத்தப் படுவதாகவும், தவறான கருத்தை கூறுவதாகவும் தெரிவித்தனர். தற்போது இந்தவிவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக சிலகருத்துக்கள் சொல்லப்பட்டது தவறு.

பா.ஜ., செயல் தலைவர் ஜெ.பி.நட்டா : இந்தவிவகாரத்தில் சாலை முதல் பார்லி., வரை ராகுலும் அவரது கட்சியும் நாட்டை தவறாக வழி நடத்த முயற்சித்தனர். ஆனால் உண்மை வெளிப்பட்டுள்ளது. ராகுல் தொடர்ந்து நாட்டிலேயே இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...