வரும் 2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ராம நவமி அன்று இதற்கான பணிகள் துவங்கி 2022 ம் ஆண்டிற்குள் கட்டிமுடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு , மற்றும் ராம் மந்திர் அறக்கட்டளையும் இடம்பெறும். குஜராத்தில் சோம்நாத் கோவில் அறக்கட்டளை போன்று பல உறுப்பினர்களாக அமைப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறது. இருப்பினும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 வரையில் இருக்ககூடும்.
இது குறித்த இறுதி முடிவு பிரதமர் மோடிதான் எடுப்பார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.இதனிடையே கோவில் கட்டுமானத்திற்கு அரசாங்கம் பணம் எதுவும் வழங்ககூடாது எனவும் நாடுமுழுவதிலும் இருந்து மக்களிடம் நிதிபெறப்பட வேண்டும் என வி.எச்.பி கருத்து தெரிவித்துள்ளது. மேலும் கோவிலுக்கு என தற்போது 67 ஏக்கர் நிலம் உள்ளது. கோவில்கட்ட 100 ஏக்கர் அளவிற்கு நிலம் தேவைப்படும்பட்சத்தில் 33 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் அனுமன் கர்ஹியை மையமாககொண்டு அயோத்தியை மறுவடிவமைக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்துவருகிறது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 388 ச.கி.மீ அளவில் ரிங்ரோடு, பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், விமான நிலையம் இன்ன பிறவசதிகளுடன் கூடிய மாஸ்டர் பிளான் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
“வாஸ்து சாஸ்திர முறைப்படி அயோத்தியில் ராமர் கோயில்
கோயில் எப்படி அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தகோயிலை கட்டுவதற்கான கட்டட வரைப்படத்தை கட்டிடகலை நிபுணர் சந்த்ரகாந்த் சோம்புரா தயாரித்துள்ளார். இந்த வரைப் படத்தின் அடிப்படையில் பணி தொடங்கப்பட்டால் அது நிறைவடைய மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ராமர் கோயில்கட்ட 270 அடி நீளமும் 142 அடி அகலமும் கொண்ட நிலம் போதுமானது என்றாலும், உலகம் முழுவதிலும் இருந்து எல்லா தரப்பினரையும் ஈர்ப்பதற்காக அயோத்தியாவை பெரியநகரமாக நிர்மாணிக்க வேண்டும் என்பது அவரது கருத்து நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய தங்கும்விடுதிகள், மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்…
ஒருவேளை புதிதாக அமைய உள்ள ராமர் கோயில் கட்டுமான அறக்கட்டளை கோயில் வடிவமைப்பில் மாற்றம் எதுவும் செய்யவிரும்பினால் சாஸ்திர முறைப்படி வடிவமைப்பு மாற்றப்படும் என தெரிவிக்கும் அவர், கோயிலுக்கு வாஸ்து சாஸ்த்திரம் மிகவும் அவசியம் என்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன் 50 ரூபாய்க்கு கொண்டுவரப்பட்ட கற்களின் விலை தற்போது 700 ரூபாயை எட்டியுள்ளதாக நினைவுகூறும் அவர், இப்போதே பணியை தொடங்கினால் 60 கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார். இதுவரை 20 கோடி ரூபாய் மதிப்பில் ராமர் கோயில் கட்ட பணியில் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார், சந்த்ரகாந்த்
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |