பாராளு மன்றத்தில் லோக்பால் மசோதாவை நிச்சயமாக_கொண்டு வருவோம் . இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அது_நிறைவேறுமா? நிறைவேறாத ? என்பது பற்றி உத்தரவாதம் தர முடியாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார் .
பாராளு மன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்யும் போது உள்ள நிலைமைகுறித்து இப்போதைக்கு கணிக்க முடியாது. ஜனநாயகமும், காந்தீய_கொள்கைகளும் அகிம்சையை போதிக்கின்றன. இந்த அகிம்சை செயலை_மட்டும் குறிப்பிடவில்லை. வார்த்தைகளிலும் அகிம்சை இருக்கவேண்டும் என அன்னாஹசாரே குழுவினரை கேட்டுகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .
அப்படினா லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யிற மாதிரி தாக்கல் செய்துவிட்டு அதை பாராளு மன்றத்தில் நிறைவேறாமல் தோற்கடித்து விடுவோம் என்பதை மறைமுகமாக தெரிவித்துவிட்டார், அகிம்சையை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை , காந்தியின் பெயரை சொல்லி பொழப்பை நடத்தும் காங்கிரஸ் அவரது அகிம்சையை பின்பற்ற வில்லை அப்படி பின்பற்றியிருந்தால் சீக்கிய படுகொலை நடந்திருக்காது ,
ஆனால் அன்னா ஹசாரே போன்றவர்கள் காந்திய வழியிலிருந்து மாறாமல் இருப்பதால் தான் இன்று உங்கள் ஆட்சி தொடர்கின்றது என்பதையும் மறந்து விடாதீர்
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.