கட், காப்பி,பேஸ்ட் இதுதான் மாநிலக்கல்வி கொள்கை

சர்வதேச அரசியல்குறித்து படிப்பதற்காக லண்டன் செல்வது குறித்து நேரம் வரும் பொழுது பேசுகின்றேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை , சிட்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செங்கோல் என்றால் பெண்களை இழிவுபடுத்துவது என மதுரை எம்பி சு வெங்கடேசன் பேசியிருக்கிறார். ஆனால் அவரே மதுரைபெண் மேயரிடம் செங்கோல் வழங்கும் புகைப்படம் இருக்கிறது.

இதுபெண் மேயரை அடிமைப்படுத்துவது என எடுத்துக் கொள்ள முடியுமா? என கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் செங்கோல் குறித்து புதியலாஜிக்குடன் சு. வெங்கடேசன் பேசியிருக்கிறார். செங்கோல்குறித்து வள்ளுவர் சிறப்பு அதிகாரமே கொடுத்திருக்கிறார்.

திருவள்ளுவர் செங்கோலுக்கு பத்து குறல் கொடுத்திருப்பது தவறு என சொல்லலாமா? எனக்கூறியவர், நான் சு.வெங்கடேசனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டமனிதன். காவல் கோட்டம் உள்ளிட்ட நாவல்களை விரும்பிபடித்து இருக்கிறேன். திமுகவை கைவிட்டு விடக்கூடாது என சு.வெங்கடேசன் பேசக்கூடியகருத்து கொஞ்சம்கூட ஏற்றுக் கூடியதாக இல்லை என தெரிவித்தார்.

சர்வதேசஅரசியல் குறித்து படிப்பதற்காக லண்டன்செல்வது குறித்து நேரம் வரும்பொழுது பேசுகின்றேன். இன்னும் நாள் இருக்கின்றது. கட்சி அனுமதிகொடுக்க வேண்டும். அரசியல் சூழலை பார்த்து கட்சிதலைமை முடிவெடுக்கும். கட்சி அனுமதிகொடுக்கும் பொழுது இதைப் பற்றி வெளிப்படையாக பேசுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

லண்டன்செல்வதால் ஜோபைடன் அதிர்ச்சி என செல்வபெருந்தகை கிண்டல்செய்துள்ளது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைபோல பேட்டை ரவுடியாகவோ, குண்டராகவோ இல்லாமல் இருக்கிறேன். இப்பொழுது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக அவர் அமர்ந்திருக்கிறார். காமராஜ் இருந்தகட்சி. செல்வப் பெருந்தகை போல மூன்றாம் தர ரவுடி என்று சொல்லாமல் என்னைப்பற்றி சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

மாநில கல்விகொள்கை குறித்து பாஜக சார்பில் அறிக்கை வெளியிடஇருக்கிறோம். 2020 புதிய கல்விகொள்கையில் தாய்மொழிதான் பிரதான படமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். மாநிலக் கல்விக்கொள்கையின் முதல் பக்கத்தில் அதைத்தான் சொல்லி யிருக்கின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் அனைத்து பள்ளிகளிலும் தகவல் தொழில்நுட்பங்கள் இருக்கவேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. மாநில அரசின் கல்விக்கொள்கையில் இதைத்தான் சொல்லியிருக்கின்றது.

நூலகம் எப்படி இருக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் சொல்லிஇருப்பதை போலவே, மாநில கல்விக் கொள்கையிலும் சொல்லியிருக்கின்றனர். மாநில கல்விக் கொள்கையில் கோச்சிங்சென்டரை தடைசெய்ய வேண்டும் என சொல்கின்றனர்.

கடற்கரையோர பகுதிகளில் உள்ள மீனவசமுதாய குழந்தைகளுக்கு கடல் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும் என சொல்லி இருக்கின்றனர். இதற்குபெயர் குலக்கல்வி இல்லையா? உருது பள்ளிகள் துவங்க வேண்டும் என மாநில கல்வி கொள்கையில் சொல்லிஇருக்கின்றனர். ஒரு பக்கம் இந்திவேண்டாம் என்கின்றனர். இன்னொரு பக்கம் உருது பள்ளி துவங்கவேண்டும் என்கின்றனர்.

மதராசா கல்லூரிகளில் படிக்கும்பாடங்களை அங்கீகாரம் கொடுத்து டிபன்ஸ், சிவில் உள்ளிட்டவற்றிக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என சொல்லி இருக்கின்றனர். கடற்கரையோரபகுதிகளைச் சேர்ந்தமீனவர் குடும்பத்தினர் கப்பல் பற்றியும்,
கடல் பற்றியும் சொல்லிக் கொடுப்பது குல கல்வி இல்லையா ?

மத்திய அரசு கொண்டு வந்திருப்பதை கட், காப்பி,பேஸ்ட் செய்து மாநிலக்கல்வி கொள்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது.கோச்சிங் சென்டர் தடை செய்யவேண்டும் என்கின்ற அரசு பள்ளிகளில் ஒழுக்கமாக நடத்தினால் ஏன் கோச்சின் சென்டர் செல்ல போகின்றனர்? கடற்கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடல் சார்ந்து சொல்லிக் கொடுப்பது குலக்கல்வி.மதராசா பாடங்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது எந்த அளவுக்கு சரியானதாக இருக்கும்?

புதிய கல்விக் கொள்கையில் என்ன தவறு இருக்கிறது என்பதை இதில் சொல்லவே இல்லை எனவும் தெரிவித்தார்.கல்வி மத்தியில் இருக்க வேண்டுமா? மாநிலத்தில் இருக்க வேண்டுமா? என்பதை விவாதிக்கலாம். அது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி வாய்இருக்கு. அவர் பேசணும். காங்கிரஸ் கட்சியில் உள்ள கொத்தடிமைகள் கைதட்டுவார்கள். ராகுல்காந்தி பேசுவதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் அவர் சொல்லி இருக்கும் பொய்களை எடுத்து சொல்ல வேண்டும்.
அக்னி பத் திட்டத்தில் இறந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி இருக்கிறார்.

பாஜகவில் இருப்பவர்கள் இந்துக்களை இல்லை என்று சொன்னால் கோபம்வரத்தான் செய்யும். இந்து மதத்தில்பிறந்த எங்களுக்கு உரிமை இருக்கிறதா? அல்லது ராகுல் காந்திக்கு உரிமைஇருக்கிறதா என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்.
உண்மையான ஹிந்து என்பவன் இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் மதிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டரை ஆண்டுகளில் விலைவாசி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. எல்லா மாநிலத்துக்கும் ஒரு முதல்வர் தான். இங்கு மூன்று முதல்வர்கள் இருக்கின்றனர். பையனும் மருமகனும் எனவும் தெரிவித்தார்.

மெக்காலே கொடுத்த ஐபிசி உள்ளிட்ட சட்டங்கள் மாற்றப்படுகிறது.சட்டம் என்னவென்று தெரியாமல் இதைமுதல்வர் பேசக்கூடாது. இந்த சட்டம் ஆங்கிலத்தில் வேண்டும் என்ற கருத்தில் உடன்பாடு இருக்கிறது. அனைத்து கருத்துக்களையும் கேட்டுத்தான் உள்ளே எடுத்துஇருக்கின்றனர். மத்தியில் தலைமையிடம் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறோம் கொஞ்சம் பொறுத்து இருங்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மேயர்கள் மாற்றத்திற்குள் செல்லவில்லை. மேயர்களை டம்மியாக போட்டிருந்தது இவர்கள்தான்.மேயரைமுட்டாளாக போட்டால் உதயநிதி ஸ்டாலின் அறிவாளியாக தெரிவார் எனவும் கூறினார்.

தமிழகத்தில் நாய் செத்துப் போச்சு , அந்த நாய்பக்கத்தில் அண்ணாமலை சென்றால் அதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று சொல்வார்கள். யாராவது அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்திருந்தால் அண்ணாமலைதான் காரணம் என்கின்றனர்.ஏர்போர்ட்டில் அண்ணாமலை மிரட்டி வசூல் செய்ய செய்தார் என்று சொல்லி இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் எவன்குற்றம் செய்திருந்தாலும் அண்ணாமலை என்கின்றனர். எங்கே எது நடந்தாலும் என் தலையில் கட்டுகின்றனர் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருளாதாரத்தை மீட்க மாலத்தீவு ...

பொருளாதாரத்தை மீட்க மாலத்தீவுக்கு இந்தியா உதவி ஆசிய நாடான மாலத்தீவு, இந்திய பெருங்கடல் பகுதியில் முக்கியமான ...

மனித உரிமை மீறலில் ஈடுபடும் நக் ...

மனித உரிமை மீறலில் ஈடுபடும் நக்ஸலைட்டுகள் -அமித்ஷா நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ...

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில ...

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்- அமித்ஷா உறுதி 'வரும் 2026ம் ஆண்டுக்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முத ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முதலில் இந்தியா தான் -முகமது முயிசு மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் ச ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் பிரதமர் மோடி -அமித்ஷா பெருமிதம் '23 ஆண்டுகால பொது வாழ்வை பிரதமர் மோடி நிறைவு ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதம ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, கடவுள் துர்க்கைக்கு அர்ப்பணிக்கும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...