பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச் சருமான அமித்ஷா இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஜார்கண்ட் மாநில பழங் குடியினரின் நலனுக்காக காங்கிரஸ் இது வரை என்னென நலத் திட்டங்களைச் செயல் படுத்தியுள்ளது என்பதை ராகுல் காந்தியால் பட்டியலிட்டு கூற முடியுமா என அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸை கடுமையாக சாடினார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதன் விவரம் :
கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீர் மற்றும் அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்.
அயோத்தியில் ராமர்கோவில் கட்டவேண்டும் என்பது அனைவரது ஆசை. ஆனால் தன்வோட்டு வங்கியை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பிரச்சனைக்கு தீர்வை உருவாக்க விடவில்லை. தற்போது ராமரின் ஆசியால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வழிவகுத்துவிட்டது.
அதேபோல் சட்டப்பிரிவு 370 ரத்துசெய்ததன் மூலம் பாரத மாதாவின் கிரீடத்தில் இருந்த கறை நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு வழிபிறந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் ஏழைமக்களை ஊழல்வாதிகளான காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கூட்டணி மோசம் செய்து வருகிறது.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்செய்து மக்களை ஏமாற்றி வந்தனர். ஆனால் முதல்வர் ரகுபார் தாஸ் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசென்றுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் ஜார்கண்டில் உள்ள பழங்குடி மக்களுக்காக என்னென்ன நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்ற பட்டியலை காங்கிரஸ் தலைவர் மற்றும் ராகுல்காந்தியால் கொடுக்க முடியுமா ?
ஆனால் பழங்குடி மக்களுக்கு செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்கள் குறித்து பாஜக விரிவான அறிக்கையை அளிக்கும்.ஜார்கண்ட் மாநில மக்களுக்கு இத்தனை ஆண்டுகளில் மின்சாரவசதி, எரிவாயு இணைப்பு, சுகாதார அட்டைகள், கழிப்பறைகள், வீடுகள் என எந்தவசதிகளையும் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் ஏன் செய்து தரவில்லை ?
முதல்வர் ரகுபார் தாஸ் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தில் ஊழலை மட்டுமன்றி நக்சல்களின் அட்டூழியங்களையும் கட்டுப்படுத்தி யுள்ளது.
ஜார்கண்ட் என்ற மாநிலத்தை உருவாக்கியதே பாஜக அரசுதான். பழங்குடி மக்களின் முக்கியத்துவத்தை உணர்த்து வதற்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி தலைவர்களின் பெருமையை விளக்கும் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தது.
பாஜக ஆட்சிக்குவந்தால் தன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க கமிட்டி ஒன்றை அமைக்கும்.
ஜார்கண்ட் மாநிலத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவாக்கினார். அதன் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி உறுதுணையாக இருப்பார் என்று அமித் ஷா கூறினார்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |