தனி நபர்மசோதா தாக்கலாகிறது.இது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்தமசோதா.”இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும் போது இந்துமதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்?” என்று சிந்தித்தார்.அதன் தாக்கம்தான் இன்று அவர் மத்திய ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டதால் மசோதாவாக தாக்கலாகிறது.
இந்து கோவில்கள் இனிமேல் மத்தியஅரசு நியமனம் பண்ணும் தனிவாரியத்திடம் கொடுக்கப்படும்.மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அறநிலயத் துறை,தேவஸ்வம் போர்டு முதலியன யாவையும் கலைக்கப்பட்டுவிடும்.
உண்மையான சமத்துவம் என்பது எந்த மதவிஷயத்திலும் அரசு தலையீடுகூடாது என்ற நீதிமன்ற ஆலோசனைக்கு இணங்க எடுக்கப்படும் முடிவு.
வக்ப் போர்டு,கிறுத்துவ டயோஷியஸ் போன்றே தன்னிச்சையாக இயங்கவுள்ள இந்து ஆணையத்திடம் மத்திய அரசு நிர்வாகத்தை ஒப்படைத்து விடும்.
எல்லா மாநில அரசுகளும் இந்துக்கோவில் விவகாரங்களிலிருந்து விலகி விட வேண்டும்.இந்துக் கோவில் சொத்துக்கள்,வருமானங்கள் அனைத்தும் இனி மத்திய அரசு நியமிக்கும் ஆணையத்தின் கீழ்தான் வரும்.இந்துக்கோவில் பராமரிப்பு மற்றும் முன்னேற்றத்துக்கே அதன் சொத்துக்களும் வருமானமும் பயன்படுத்தப் படும்.
இது ஒரு நல்ல திருப்பம்.இது இந்து கோவில்களின் மறு மலர்ச்சிக்கு வித்திடும்.தனி நபர் மசோதாவாக தாக்கலானாலும்,ஆளும் கட்சி ஆதரிப்பதால்,குரல்வாக்கில் நிறைவேறும் சாத்யம் உள்ளது.நல்லது நடக்கும்
அடியேன்
என்.ஸ்ரீனிவாசன்
ஆடிட்டர் மதுரை.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |