‛‛ பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது” , என பிரதமர் மோடி கூறினார்.
பெண்களை தொழில்முனைவோராக உயர்த்தி, அவர்களை லட்சாதிபதிகளாக்கும் திட்டமான, ‘லட்சாதிபதி சகோதரி’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு, முதல் ஆண்டு ரூ.10,000 உதவித் தொகையும், அரசு உதவித் தொகையாக ரூ 12,500 ,வங்கிக் கடனாக ரூ12,500 ம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும். இந்த உதவித் தொகையை பெற, மகளிர் துவங்க உள்ள சுய தொழில் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மஹாராஷ்டிராவில் ஜல்கோவான் என்ற இடத்திலும் ,ராஜஸ்தானின் ஜெயப்பூரில் நடைபெற உள்ள விழாவிலும் லட்சாதிபதி சகோதரி திட்டத்தின் கீழ் தேர்வு பெற்ற பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டை கட்டமைப்பதிலும், வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதிலும் இந்திய பெண்கள் சக்தி எண்ணிலடங்கா பங்களிப்பை அளித்து வருகிறது. வளர்ச்சியடைந்த தேசமாக நமது நாட்டை கொண்டு செல்வதற்கும் பெண்கள் முன்வந்துள்ளனர். நாடு சுதந்திரத்திற்கு பிறகு, நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்காக முந்தைய அரசுகள் செய்த பணிகளை விட கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவற்றை செய்துள்ளோம்.
நமது தாயார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்; அவர்களின் வேதனையை உணர்ந்து கொண்டுள்ளேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகளுக்கும் தெரிவித்து கொள்கிறேன். யார் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களையும், அவர்களுக்கு உதவுவோரையும் தப்பிக்க விட மாட்டோம். மருத்துவமனை, பள்ளி, அரசு மற்றும் போலீஸ் அமைப்புகள் என எங்கு புறக்கணிப்பு நிகழ்ந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வரும் போகும். ஆனால், பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பது நமக்கு உள்ள முக்கிய கடமை. இது சமூகத்திற்கும், அரசுக்கும் பொருந்தும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வலிமையான சட்டங்களை அரசு இயற்றுகிறது. முன்பு, குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்குப்பதிவு செய்யாமல், தாமதப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் பாரதீய நியாய சன்ஹீதா என்ற புதிய சட்டத்தில் இத்தகைய தடைகள் அகற்றப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் செல்லாமல் ஆன்லைன் மூலம் வழக்குப்பதியலாம். அந்த வழக்கை யாரும் சிதைத்துவிடாமல் இருக்க வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும். இந்திய சமூகத்தில் இருந்து இந்த அட்டூழியம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |