நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் பாஜக 353 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பாஜக எம்.பி.க்கள் மீது பிரதமர் மோடி கோபமாக இருப்பதாக சொல்ல படுகிறது.இதுபற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத்தில் நடக்கும் அவை கூட்டங்களில் பாஜக எம்.பி.க்கள் பெரும்பாலும் வராமல் அப்சென்ட்ஆவதால் மோடி அதிருப்தியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமாக நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் குழுகூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘எந்த காரணமும் இல்லாமல் எம்.பிகள் அவைக்கு வராமல் இருப்பதை மோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். அதனால் அனைவரும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசவேண்டிய இடத்தில் பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து அப்சென்ட் ஆவது எதிர்கட்சியினர் மட்டுமின்றி பிரதமர் மோடிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |