கட்சி தாவல் என்பது என் ரத்தத்தில் இல்லை

தன்னுடைய எதிா் கால அரசியல் முடிவுகுறித்து பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், மௌனம் காத்து வந்த பாஜக தலைவா் பங்கஜா முண்டே , ‘தான் பாஜகவில் இருந்து விலகவில்லை’ என செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தன்னுடைய சுட்டுரை கணக்கின் சுயவிவரக் குறிப்பு பக்கத்தில் பாஜக குறித்த விவரங்களை நீக்கியநிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதல் வருமான மறைந்த கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, செவ்வாய்க் கிழமை பாஜகவின் மூத்த தலைவா்களான வினோத்தவ்தே, ராம் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ பாபன்ராவ் லோனிகா் ஆகியோரை தெற்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பங்கஜா முண்டே கூறுகையில், நான் பாஜகவை விட்டு வெளியேறவில்லை. கட்சி தாவல் என்பது என் ரத்தத்தில் இல்லை. என்னுடைய சுட்டுரை சுயவிவரக் குறிப்புப் பக்கத்தில் ‘பாஜக’வை அகற்றுவதன் மூலம் கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எண்ணவில்லை என்று கூறி இதுதொடா்பான வதந்திக்கு மறுப்பு தெரிவித்தாா்.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் சிவசேனை, என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைத்துள்ள நிலையில், மாற்றப்பட்ட அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டே பங்கஜா முண்டே பாஜகவிலிருந்து விலக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை அவா் மறுத்துள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...