குடியுரிமை திருத்தச்சட்டம், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல

பாஜக பூத்நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் குடியுரிமைத் திருத்தச்சட்ட விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தி, கலவரத்தை தூண்டுகின்றனர்.

சிறுபான்மையினருக்கு நான் ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறேன். குடியுரிமை சட்டத்தால், உங்களின் குடியுரிமை பறிபோகாது.

அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கண்களைத் திறந்து பாருங்கள். பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதஸ்தலமான நன்கானா சாகிப் கடந்த இரு நாட்களுக்கு முன் எவ்வாறு தாக்கப்பட்டது என்பதை பாருங்கள். குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருபவர்களுக்கு அங்கு நடந்த சம்பவமே பதிலாகும். தவறான செய்திகளை எதிர்க் கட்சிகள் பரப்புகின்றன. ஓட்டு வங்கிக்காக இதனை காங்கிரஸ் செய்கிறது. குடியுரிமை திருத்தச்சட்டம், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த போது, 15 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று வாக்குறுதிஅளித்தது. இப்போதுவரை அந்த கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. டெல்லிக்கு என்ன செய்தீர்கள் என்பதை கெஜ்ரிவாலிடம் மக்கள் கேட்கவேண்டும்.

டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...