மிஸோரம் மாநில பாஜக தலைவராக வன்லால்முகா தோ்வு

மிஸோரம் மாநில பாஜக தலைவராக வன்லால்முகா செவ்வாய்க் கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

மிஸோரமில் மாநில பாஜக உள்கட்சிதோ்தல், அண்மையில் நடைபெற்றது. தோ்தல் முடிவுகளை பாஜக மூத்த தலைவா் வினோத்சோன்கா் செவ்வாய்க் கிழமை அறிவித்தாா். இதில் பாஜக பொதுச்செயலாளா் வன்லால்முகா மாநில தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். முன்னதாக ஜே.வி.லுனா மாநில தலைவராக இருந்தாா்.

மாநில தலைவராக தோ்வானது குறித்து வன்லால்முகா பேசியதாவது: ‘மிஸோரம் போன்ற மாநிலத்தில் பாஜக தலைவராகி கட்சியை வழிநடத்துவது, அவ்வளவு எளிதானபணியல்ல. அதற்கென ஒருவித துணிச்சல் தேவைப்படுகிறது. ஆனால், தலைவா் பதவியேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 70 ஆயிரம்கட்சி உறுப்பினா்கள் என்னை ஆதரித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்குவாா்கள் என நம்புகிறேன். அடுத்த நான்குஆண்டுகளில், ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது ஒன்றுமுதல் 7 புதிய உறுப்பினா்களை கட்சியில் சோ்க்க கடுமையாக பாடுபட்டால், சட்டப்பேரவை தோ்தல்களில் பாஜக வெற்றி பெறும் என உறுதிபட நம்புகிறேன்”.

முன்னதாக, மிஸோரமில் இருந்து பாஜக தேசியகவுன்சில் உறுப்பினராக முன்னாள் அமைச்சரும், கட்சி தலைவருமான நிருபம்சக்மா ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

இதனிடையே, வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்கு மத்தியஅரசு முக்கியத்துவம் அளிப்பதாக பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வினோத் சோன்கா் தெரிவித்தாா்.

கிறிஸ்தவா்கள் அதிகம்நிறைந்த மிஸோரமில், கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் முதல்முறையாக பாஜக ஒரு தொகுதியை கைப்பற்றியது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...